PUBLISHED ON : ஜூன் 03, 2018

ராஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் காணப்படும் இந்த அழகிய கட்டடம், சர்ச் என்றால் நம்ப முடிகிறதா...
செயின்ட் பாசில் கதீட்ரல் சர்ச் என்றழைக்கப்படும் இதற்கு ஒரு காதல் கதை உண்டு.
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஒருவர், ஏழை பெண் ஒருத்தியை காதலித்தார்; அவளை மணம் முடிக்க நினைத்த போது, குடும்பத்தினர் சம்மதித்தாலும், மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த காதலன், தன் திருமணத்தை நடத்த, சொந்த செலவில் கட்டியது தான் இந்த சர்ச்.
அதிலிருந்து, இது, காதல் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. இன்று, இந்த சர்ச்சை காண, ஏராளமானோர் வருகின்றனர். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபின், மாஸ்கோவில், இருந்த, 200க்கும் மேற்பட்ட சர்ச்சுகளை இடித்தபோதும், காதல் நினைவிடமான இந்த சர்ச்சை யாரும் அழிக்க முன் வரவில்லை.
- ஜோல்னாபையன்.
