தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நாட்டின் ஒரே ரேடியோ மியூசியம்!

நாட்டின் ஒரே ரேடியோ மியூசியம்!

நாட்டின் ஒரே ரேடியோ மியூசியம்!


PUBLISHED ON : ஜூன் 25, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டிற்குள் நுழைந்ததும், திரும்பிய இடமெல்லாம் பழங்காலத்து ரேடியோக்களாகவே இருக்கின்றன; 1,100 பிராண்டுகளில் 1,500 ரேடியோக்கள் அணிவகுத்து, மலைக்க வைக்கிறது.

அது, ரேடியோ கடை அல்ல; அவை அனைத்தும் ஒரு தனிப்பட்ட மனிதரின் சேகரிப்பு.

உ.பி., மாநிலம் மொராதாபாத் மாவட்டம், மொகமத்புர் பகுதியைச் சேர்ந்த, ராம்சிங் தான் அந்த சேகரிப்பாளர்.

தற்போது, 67 வயதாகும் ராம்சிங், அரசு ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றவர். இவருக்கு, 11 வயதாகும்போது, 'பேசும் பெட்டி' என்று தான், ரேடியோ அறிமுகமானது. அப்போது முதலே இவருக்கு, ரேடியோ மீதான காதல் வந்து விட்டது. வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்ததும், அந்த காதல் தீவிரமானது.

வேலைக்கு சேர்ந்து முதன் முதலில் வாங்கிய சம்பளம், 350 ரூபாய். நமக்கு என்ன வாங்கி வருவார் என்று மொத்த குடும்பமும் எதிர்பார்த்து காத்திருக்க, இவரோ, தன் மொத்த சம்பளத்தையும் கொடுத்து, ஒரு ரேடியோவை வாங்கி வந்தார்.

அது முதல், நாட்டில் எத்தனை வகை ரேடியோ இருக்கிறதோ அதை எல்லாம் வாங்கி, சேகரிக்கவும் ஆரம்பித்தார். இதில், பழைய காலத்து ரேடியோவை வாங்குவதற்காக, பல்வேறு ஊர்களுக்கும் பயணம் செய்துள்ளார்.

ரேடியோவை கண்டுபிடித்த மார்கோனியின் நிறுவனத்தின் ரேடியோவையும், முதல் ஸ்டீரியோ ரேடியோவையும் அபூர்வமாக நினைக்கிறார்.

'ரேடியோ, பலரது வீட்டிலும் இருப்பது தான்; எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனாலும், உலகில் எங்குமே, ரேடியோ மியூசியம் இல்லை...' என, இவரது ரேடியோ சேகரிப்புகளை பார்த்த பல பிரபலங்கள் கூற, தற்போது, ராம்சிங்கின் ரேடியோ மியூசியம் புகழ்பெற்று வருகிறது.

இவரிடம் உள்ள ரேடியோக்களில் சில மட்டும், செயல்படும் நிலையில் உள்ளது. தனக்கு பின், தன் மகன் ராகுல், இந்த ரேடியோ மியூசியத்தை எடுத்து நடத்துவார் என்று, நம்பிக்கை கொண்டுள்ளார்.

'வால்வு ரேடியோ காலம் முடிந்து, டிரான்சிஸ்டர் வந்து, தற்போது, மொபைல் போன், 'சிப்'பில் ரேடியோ குடிக் கொண்டுள்ளது. மாறும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, ரேடியோவின் தன்மை மாறினாலும், 'டிவி' போல மக்களின் காலத்தை களவாடாமல் சிறந்த பொழுது போக்கு அம்சமாக இருப்பது, அப்போதும், இப்போதும், எப்போதும், ரேடியோ தான்.

'அதனால் தான் நம் பிரதமர் கூட, தன் கருத்துக்களை, 'மனதின் குரலாக' ரேடியோவில் ஒலித்து வருகிறார். அந்த மனதின் குரலுக்கு சொந்தக்காரர், ஒருமுறை, என் ரேடியோ மியூசியத்தை பார்க்க வந்தால் போதும்; நான் இந்த ரேடியோ மியூசியத்தை வைத்த லட்சியம் நிறைவடையும்...' என்கிறார், ராம்சிங்.

மகிழ்ச்சியும், உழைப்பும், வாழ்நாளை அதிகரிக்கும்.கிங் ஜாங்

எம்.ஆர்.ஜே.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us