PUBLISHED ON : மே 20, 2018

அ நிறம் | அளவு
தஸ்லிமா நஸ் ரீன் எழுதிய, 'லஜ்ஜா' (வெட்கம்) என்ற புத்தகம், மதத்துக்கு எதிரானது என்று, கடந்த 1994ல், அவரை வெளியேற்றியது, வங்கதேச அரசு. அன்று முதல் இன்று வரை, நாடோடியாக உலகம் முழுக்க சுற்றுகிறார், நஸ் ரீன்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், 10 ஆண்டுகள் தங்கியபோது, ஏராளமான விருதுகளும், பண உதவிகளும் கிடைத்தன. அதை வைத்து தான் இன்றும் வாழ்ந்து வருகிறார். இப்போது, சுவிட்சர்லாந்து நாட்டு பிரஜையாக இருக்கிறார். 'ஜெர்மனியில் உள்ள சுவிஸ் வங்கியில், சேமித்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை, பல காரணங்களுக்காக இழந்தேன்...' என்கிறார்.
— ஜோல்னாபையன்.
