PUBLISHED ON : டிச 20, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில், வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள கரோவ் பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்தில், சமீபத்தில், 220 கிராம் எடையுள்ள மிகப் பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின், இரண்டாவது மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன், 1905ல், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், 660 கிராம் எடையுள்ள வைரம், கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. இந்த வைரம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதில் பெரும்பாலானவை, பிரிட்டன் மகாராணிக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
— ஜோல்னாபையன்.

