தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/முதலை வாயிலிருந்து தப்பிய அதிசயம் !

முதலை வாயிலிருந்து தப்பிய அதிசயம் !

முதலை வாயிலிருந்து தப்பிய அதிசயம் !


PUBLISHED ON : அக் 17, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலையிடம் சிக்கினால் உயிர் தப்ப முடியுமா?

முடியும் என நிரூபித்துள்ளார் ஒருவர். ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் ஆற்றில் அதிக அளவு முதலைகள் உள்ளன. இந்த பகுதியில் வேட்டைக்கு சென்ற ஒருவர், தன் நாய்களை குளிப்பாட்ட ஆற்றிற்கு சென்றார். தண்ணீருக்குள் இறங்கிய அவரை, 13 அடி நீளமுள்ள பெரிய முதலை ஒன்று காலை பிடித்து கவ்வியது.

அவரை தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. அவரின் அலறல் சப்தத்தை கேட்ட கரையில் இருந்த அவரது நண்பர், உடனே ஆற்றில் குதித்தார். முதலையின் மேல் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். உடனே, முதலை தன் பிடியை தளர்த்தியது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி காலை உருவிக் கொண்டு வேகமாக கரைக்கு ஏறினார் அந்த நபர். டார்வின் நகரில், 'ராயல் டார்வின்' மருத்துவமனையில் இப்போது அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'அவரது உயிருக்கு ஆபத்து இல்லை...' என, கூறிய மருத்துவமனை நிர்வாகம், அவர் பெயரை வெளியிட மறுத்து விட்டது. இந்த ஆற்றில் இது போல் அடிக்கடி சம்பவங்கள் நடப்பதாக இந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us