PUBLISHED ON : அக் 17, 2010

அ நிறம் | அளவு
* ஏதும் அறியா
பெண் மனதில்
எத்தனை மாற்றம்
நீ செய்தாய்?
என்ன என்றே
இனம் புரியாத
இன்பம் எழ நீ
எது செய்தாய்?
*பார்வையில் கூட
வாளின் கூர்மை
பதத்தைக் காட்டி
வதை செய்தாய்!
பையப் பைய
பக்கம் நெருங்கி
பாசத்தாலே
சிறை செய்தாய்!
*உன்னைச் சுற்றித்
தொடரும் வண்ணம்
எந்தன் மனதை
நீ கொய்தாய்!
உன்னைத் தவிர
ஒன்றும் நினையா
வண்ணம் அன்பு
மழை பெய்தாய்!
*காலம் முழுதும்
காதல் செய்தே
காலங் கடத்தி
விடுவாயோ?
கண்ணா எந்தன்
கவுரவம் காக்க
கழுத்தில் மாலை
இடுவாயோ?
*உனக்கே சொந்தம்
என்னும் உண்மை
உணர்த்த ஓடி
வருவாயோ? - உன்
நிழலாய் தொடரும்
எந்தன் கழுத்தில்
மாலை சூட்டி
மகிழ்வாயோ?
— வி.தேவகி, நெல்லை.
