தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண் மாற்றுத்திறனாளிகளின் தாயம், "தியாகம்'!

பெண் மாற்றுத்திறனாளிகளின் தாயம், "தியாகம்'!

பெண் மாற்றுத்திறனாளிகளின் தாயம், "தியாகம்'!


PUBLISHED ON : ஜூன் 17, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறக்கும்போதே, இடது கை இல்லாமல் ஊனமாக பிறந்தவர் அமுதசாந்தி.

ஆனால், சாதிக்க வேண்டும் என்ற வேகத்தோடு வளர்ந்தவர்.

ஆசிரம வாழ்க்கை, இவரது உள்ளத்தில், சேவை மனப்பான்மையை விதைத்து, விருட்சமாக வளரச் செய்தது.

இதன் காரணமாக, முதுகலை படிப்பை முடித்ததும், கிடைத்த வேலையை விட்டு விட்டு, கிராமப்புற ஊனமுற்ற பெண்களுக்கு சேவை செய்வதற்காகவே, மதுரையில் கடந்த 2005ல், 'தியாகம் பெண்கள் அறக்கட்டளை'யை துவக்கினார்.

வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல், உடல் தகுதியின்மை, பொருளாதார வசதியின்மை, கல்வியறிவின்மை, சமூகச் சூழல் ஆகியவற்றை காரணம் காட்டி, தங்களைத் தாங்களே முடக்கிக் கொள்ளும் ஊனமுற்ற பெண்கள், உழைப்பதற்கு துணிந்து கூலியை பெறத் துவங்கும் போதுதான், அவர்களுக்கான மரியாதை இங்கு சாத்தியம் என்பதை உணர்ந்தார்.

வீட்டை விட்டு வெளியே வராத வரை, மாற்றுத்திறனுடையோர் வாழ்வில், எந்தவொரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்பதை, அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உணர்த்தினார்.

இதன் காரணமாக, கிராமங்களில் முடங்கிக் கிடந்த ஊனமுற்ற பெண்களுக்குள், உற்சாகத்தையும், 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியவர். அவர்கள், மதுரை நகர் பகுதியில் வந்து இலவசமாக தங்குவதற்கு, ஒரு இல்லத்தை ஏற்பாடு செய்தார். பின், அவர்களின் விருப்பம், கல்வி, திறமை அடிப்படையில், தையல் முதல் கம்ப்யூட்டர் வரை கற்றுத்தர, இல்லத்திலேயே இலவசமாக ஏற்பாடு செய்தார்.

தொடர்ந்து மாலைநேரக் கல்வி மையம், சுய உதவிக்குழு, நட்பு வட்டம், கலைக்குழு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மையம், ஆகிய எட்டு பிரிவுகள் துவங்கப்பட்டு, இன்றைய தேதிக்கு, மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள, 42 கிராமங்களில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான ஊனமுற்ற சகோதரிகள் பலன் பெற்று வருகின்றனர்.

தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளால், அதை தொழிலாக மட்டுமில்லாமல், வாழ்வாகவே மாற்றிக் கொண்டனர். இதனால், பாரமாக இருப்பர் என்று நினைத்த அந்த பெண் பிள்ளைகள்தான், தற்போது மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தம் பெற்றோருக்கு, ஆயிரமாயிரமாய் சம்பாதித்து கொடுத்து, குடும்பத்தை தாங்கி பிடித்து வருகின்றனர்; பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.

தியாகம் அறக்கட்டளையில் உருவாக்கப்படும், 'நைட்டி' போன்ற உடைகள், தரத்தாலும், நியாயமான விலையாலும் மிகவும் பிரசித்தம் பெற்றுள்ளன. அந்த ஆடைகளை, உடல் ஊனமுற்ற பெண்களிடம் கொடுத்து விற்பனை செய்வதன் மூலம், உடல் ஊனமுற்ற பெண்கள் பலர், தற்போது சிறுதொழில் முனைவர்களாகவே, அடையாளத்தையும், பெருமையையும் பெற்றுள்ளனர்.

'கிராமங்களில் உள்ள உடல் ஊனமுற்ற பெண்களே... உங்கள் பலம் உங்களுக்கு தெரியாது. உங்களால் முடியாதது எதுவுமில்லை, உங்களது ஒரே முயற்சி, 'தியாகம் பெண்கள் அறக் கட்டளை'யுடன் தொடர்பு என்பதாக மட்டும் இருக்கட்டும். அதன்பின், உங்கள் வாழ்க்கையில் கவலைகளுக்கும், வேதனைகளுக்கும் வேலையில்லை...' என்று சொல்லும் அமுதசாந்தியின் முழக்கமே, துளிர்த்தே தீரும் நம்பிக்கையின் விதை என்பதுதான்.

தொடர்புக்கு: 9345213417, 0452-2602195.

***

எம். லதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us