PUBLISHED ON : ஜன 01, 2023

அ நிறம் | அளவு
பழைய காலண்டர்களை வைத்து ஏதேனும் ஆக்கப்பூர்வமாக செய்ய, கொஞ்சம் படைப்புத்திறன் இருந்தால் போதும், அழகு பொருட்களாக மாற்றி பயன்படுத்தலாம்
பொதுவாக, மாத காலண்டர்களில் உள்ள எண்கள் பெரிதாக இருக்கும். அதை எடுத்து குழந்தைகளுக்கு எண்களை பற்றி சொல்லித் தரலாம்
குழந்தைகளுக்கு, பல காகித கைவினைப் பொருட்களை செய்ய சொல்லித் தர, மாத காலண்டரின் தாள்களை பயன்படுத்தலாம். பழைய மாத காலண்டர்களில் உள்ள படங்களை கொண்டு புத்தகங்களையும், அதன் மேலட்டையையும் அலங்கரிக்கலாம்
பழைய காலண்டர் அட்டையில் புத்தக பக்கங்களை அடையாளம் காண உதவும், 'புக் மார்க்' செய்யலாம்
நம் கற்பனையைப் பயன்படுத்தி, மேஜை காலண்டரில் புகைப்படங்களை ஒட்டி, 'போட்டோ ஸ்டாண்டு' ஆகவும் பயன்படுத்தலாம்.
— ஜோல்னாபையன்
