PUBLISHED ON : ஜன 01, 2023

நியாயமான கோரிக்கைகள், வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டாலும், அதை சகிப்புத் தன்மையுடன் ஏற்று, பழிவாங்கும் படலத்தை கைவிடுவோம்
* லஞ்சம், ஊழல், விதிமீறல்கள் மலிந்து விட்டாலும், அவற்றின் மூலம் நாம் எந்த பலனையும் பெறக் கூடாது
* சாலை விதிகளை கடைப்பிடித்து, பாதுகாப்பான பயணத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்
* கூட்டுக் குடும்ப முறை வழக்கொழிந்து வரும் நிலையில், சிதறிக் கிடக்கும் உறவுகளுடன் உள்ள தொடர்பை விட்டு விலகாமல், திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் ஒன்று கூடி பேசி மகிழ்வோம்
* குழந்தைகளின் தவறுகளை கடுமையுடன் கண்டிக்காமல், அன்பான, நேர்மறை சொற்களால் புரிய வைத்து திருத்துவோம். தவிர, நாம் வசிக்கும் இடத்தில் அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் தோழமையுடன் பழகுவோம்
* சுற்றுச்சூழலை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிக்காப்பதில் அக்கறை காட்டுவோம். முக்கியமாக, பூமிக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்ப்போம்
* இளைய தலைமுறையினருக்கு பெண்மையைப் போற்றும் மனப்பக்குவத்தை விதைப்போம். இதனால், பாலியல் வன்கொடுமைகள் ஒழிந்து, பயமில்லாத சமுதாயம் உருவாகும்
* ஆடைகள் அணிவதில் கண்ணியம் காத்து, நம் கலாசாரத்தை காப்பாற்ற உறுதி ஏற்போம்
* தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்
* வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க முடியாவிட்டாலும், தொட்டிச் செடிகளையாவது வளர்ப்போம்
* பிறரின் துயரை களைய, நம் சக்திக்கு தகுந்தாற் போல உதவுவோம்
* உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். 'எனக்கு இதெல்லாம் செய்யத் தெரியாது. நான் சொன்னா யாரும் கேட்க மாட்டாங்க...' என்று துவளாதீர்கள். தன் மீது நம்பிக்கையின்றி எந்த விஷயத்தையும், யாரிடமும் நீங்கள் பேசி விட முடியாது. தன்னம்பிக்கை தான் பிறருடன் உங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தும். பிறருடன் உறவாடவும், தன்னை வளர்த்துக் கொள்ளவும் முக்கியமான ஏணி அதுதான்
* நகைச்சுவை உணர்வு, உங்களை எப்போதும் லேசாக்கும். மற்றவர்களின் மனசுக்குப் பிடித்தமானவர்களாக, அனைவரும் விரும்பக் கூடியவர்களாக இருப்போம்.