PUBLISHED ON : செப் 14, 2025

தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான, கொலம்பியாவின், ரியோ பியூனஸ் அயர்ஸ் என்ற நதி, ஒரு காலத்தில், அதிகளவு மாசுபாட்டால் சீரழிந்தது.
குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை, அந்த நதியை, நாற்றமடிக்கும் சாக்கடையாக மாற்றின. ஆனால், உள்ளூர் மக்கள் இதை சகித்துக் கொள்ளவில்லை.
கடந்த, 2000ம் ஆண்டின் துவக்கத்தில், சமூக ஆர்வலர்கள், மீனவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, அனைவரும் ஒன்றிணைந்து, புரட்சிகர மீட்பு இயக்கத்தைத் துவங்கினர். 10 ஆண்டுகள் கடின உழைப்பை வழங்கி, குப்பைகளை அகற்றி, மரங்களை நட்டு, மாசு ஏற்படுத்திய தொழிற்சாலைகளை எதிர்த்துப் போராடினர். தீவிரமாக செயல்பட, மீண்டும் புத்துயிர் பெற்றது, அந்த நதி.
இப்போது அந்த நதியில், தெளிவான நீர் ஓடுகிறது, மீன்கள் துள்ளி விளையாடுகின்றன, பறவைகள் பாடுகின்றன.
இது, சாதாரண மீட்பு அல்ல. மக்களின் ஒற்றுமையால், இயற்கையை மீட்டெடுத்த சாகசம்.
- ஜோல்னாபையன்

