தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/125 ஆண்டுகளாக பாடப்படும் பாடல்!

125 ஆண்டுகளாக பாடப்படும் பாடல்!

125 ஆண்டுகளாக பாடப்படும் பாடல்!


PUBLISHED ON : ஏப் 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, 1867ல் ஜெர்மனியில் பிறந்த போல்ப்ரெஸ்ட் என்பவர், கிறிஸ்துவ மத போதகராக, தன், 22வது வயதில் கேரளா வந்தார். அவர், நன்றாக மலையாளம் கற்று புத்தகங்களும், கவிதைகளும் எழுதினார். இவர், 125 ஆண்டுகளுக்கு முன் எழுதிய மலையாள பாடல் ஒன்றை, இன்றும் பாடிக் கொண்டிருக்கின்றனர், கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்தவர் ஒருவர் மரித்தால், அவர் உடலை வீட்டிலிருந்து இடுகாட்டுக்கு எடுத்து செல்லும் போது, 'சமயமாம் ரத்தத்தில் ஞான் சொர்க்க யாத்ர செய்யும் போள்' என்ற அந்த பாடலை பாடுகின்றனர்.

இப்பாடலில் சில மாற்றங்கள் செய்து, அரனாழிக நேரம் என்ற படத்தில் ஒலிக்க செய்து, அதை மேலும் பிரபலமாக்கினார், மறைந்த மலையாள கவிஞர், வயலார். பாடல் எழுதிய ஜெர்மன் மத போதகர், 1921ல் காலமான போதிலும், 125 ஆண்டுகளாக அவரது பாடல்களை பாடி வருகின்றனர்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us