
'ஸ்மார்ட் போன்' புழக்கத்தில் வந்ததிலிருந்தே, யாரும் அக்கம் பக்கத்தை பார்த்து நடப்பதே இல்லை. போனை பார்த்தபடியே நடந்து செல்வதால், சாலையில் உள்ள கழிவு நீர் தொட்டிகளில் பலர் விழுந்து விடுகின்றனர்.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த, 'மின்வூக் பாயெங்' என்ற தொழில்நுட்ப நிறுவனம், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கண்ணை தயாரித்துள்ளது.
இந்த பிளாஸ்டிக் கண்ணில், சென்சார் கருவிகள், சிறிய ஸ்பீக்கர் போன்றவை இருக்கும். இதை நெற்றியில் பொருத்தியபடி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தலையை குனிந்தாலே, பிளாஸ்டிக் கண்ணில் உள்ள இமைகள் திறந்து செயல்படத் துவங்கும்.
நடந்து செல்லும்போது, எதிரில் தடைகள் இருந்தால், அதில் உள்ள கருவி உங்களை எச்சரிக்கும். மூன்றாவது கண் என அழைக்கப்படும் இந்த பிளாஸ்டிக் கண், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
— ஜோல்னாபையன்

