
நம் அண்டை நாடான சீனாவில், சமீபகாலமாக ஒரு வித்தியாசமான மீன் உணவு, பிரபலமாகி வருகிறது. ஒரு பெரிய மீனின் செதில்களை களைந்து விட்டு, அதன் உடல் மற்றும் வால் பகுதியில் மசாலா தடவுகின்றனர்.
மீனின் தலைப்பகுதியை மட்டும், ஐஸ் கட்டிகள் வைத்து டவலால், நன்கு சுற்றி, இறுக்கமாக கட்டி விடுகின்றனர். பின், பாதி உடல் மற்றும் மீனின் வால் பகுதியை, கொதிக்கும் எண்ணெய்க்குள் அமுக்கி, நன்றாக வேக வைத்து எடுக்கின்றனர்.
மீனின் தலைப் பகுதியில் கட்டப்பட்டிருந்த டவலை அகற்றி, பெரிய தட்டில் வைத்து, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர்.
இப்போது மீனின் உடல் மற்றும் வால் பகுதியை மட்டும், வாடிக்கையாளர்கள் ருசித்து சாப்பிடலாம். ஆனால், அவற்றின் தலைப் பகுதியில், கண், வாய் ஆகிய உறுப்புகள் அசையும். இதை ரசித்தபடியே, மீன் உணவை சாப்பிடுகின்றனர், சீனர்கள்.
'என்ன ஒரு குரூரமான ரசனை...' என, சமூக ஆர்வலர்கள் பலரும், இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
— ஜோல்னாபையன்

