PUBLISHED ON : மார் 19, 2017

அ நிறம் | அளவு
தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் உள்ள பிருபெட்டிகூடம் கிராமத்தில், தலைகள் ஒட்டிய நிலையில், கடந்த, 14 ஆண்டுகளாக, வாழ்ந்து வருகின்றனர், இரட்டையர்களான, வாணி - வீணா.
இவர்களது பெற்றோர் மிகவும் ஏழை என்பதால், இவர்களை வளர்க்க முடியாமல் அரசு நிறுவன பாதுகாப்பில் விட்டுள்ளனர்.
பிரபல லண்டன் மருத்துவர்களான, டேவிட் டென் எவே மற்றும் ஒவைஸ் ஜிலானி போன்றோர், இவர்களை பரிசோதனை செய்து, 'ஒரு ஆண்டில், ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்தால், இவர்களை பிரிக்கலாம்; ஆனால், இதற்கு, 80 சதவீதம் தான், வாய்ப்புள்ளது...' என்கின்றனர்.
உலகில், இதுவரை, 30 சயாமீஸ் இரட்டையர்கள் உள்ளனர். இந்தியாவில், ஐந்து பேர் இருக்கின்றனர்.
— ஜோல்னாபையன்
