PUBLISHED ON : நவ 29, 2020

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு, சில நேரங்களில் வித்தியாசமாக மட்டுமின்றி, விபரீதமான யோசனைகளும் தோன்றும்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மெர்சிடிஸ் நகரில் வசிக்கும், கதே கன்னிங்காம், 38, என்ற பெண், அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இயற்கை மீது அளவு கடந்த ஆர்வம் உள்ள இந்த பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் கணவரையும், இரண்டு குழந்தைகளையும் கை விட்டு, அங்குள்ள பூங்காவில் இருக்கும் ஒரு மரத்தை திருமணம் செய்து கொண்டார்.
வாரத்துக்கு மூன்று முறையாவது இந்த பூங்காவுக்குச் செல்லும் அந்த பெண், மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்து, அதனுடன் நீண்ட நேரம் கொஞ்சி கொஞ்சி பேசுகிறார்.
'இந்த பெண்ணுக்கு மனநலம் பாதித்து விட்டது...' என, மற்றவர்கள் கூறினாலும், 'என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவு, இந்த மரத்தை திருமணம் செய்தது தான்...' என, கண்கள் மின்னலடிக்க கூறுகிறார், கதே கன்னிங்காம்.
— ஜோல்னாபையன்