PUBLISHED ON : நவ 29, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முன்னேறி, வாழ்க்கையுடன் நவநாகரிக பொருட்கள் கலந்து விட்டாலும், இன்னும் பழமையை கைவிட மனமில்லாமல் வாழ்பவர்களும் இருக்கின்றனர்.
பெண்கள், அழகு நிலையங்களுக்கு சென்று, விதவிதமாக சிகை அலங்காரம் செய்து கொண்டாலும், அவர்களில், இன்னும் சவுரிகளை விரும்புபவர்களும் இருக்கின்றனர். நெல்லையில் உள்ள இந்த கடையை நாடும் பெண்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான். எனினும், 'சவுரி முடிகளை கேட்டு, இன்னும் சில பெண்கள் வரத்தான் செய்கின்றனர்...' என்கிறார், கடைக்காரர்.
—ஜோல்னாபையன்