தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகம் ஒரு நூலகம் ! - ஆர்.தாமோதரன், கோவை.

உலகம் ஒரு நூலகம் ! - ஆர்.தாமோதரன், கோவை.

உலகம் ஒரு நூலகம் ! - ஆர்.தாமோதரன், கோவை.


PUBLISHED ON : செப் 19, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நூலகங்கள்

பள்ளிக் கூடங்கள் அல்ல...

ஆயினும் அவை

ஞானம் தருகிற

அறிவுக் கோவில்கள்!

* பிறர் கற்றுக் கொடுத்துப்

பெறுகிற அறிவைவிட

தானே அடைகிற ஞானமே

தலைசிறந்தது!

* உலகம் —

பள்ளிக் கூடமல்ல...

நூலகம்!

பயில்பவன் விருப்பமே

வித்வத்தை விருத்தி செய்கிறது!

* பக்கங்கள் கிழிந்த

புத்தகங்கள்தான்

பலருக்கும்

பயன் தந்து பரவசப்படுத்தியவை!

* எழுத்துக்களின் உக்கிரங்களால்

புத்தகங்கள்  என்றும்

எரிந்து சாம்பலாவதில்லை!

* அதுபோல்

அவமானங்களால்

உடைந்து போகாதவர்களே

பலருக்கும் பாடம் சொல்லத்

தகுதியுடையவர்கள்!

* படுகிற அடிகளைப்

பத்திரப்படுத்துங்கள்...

விழுகிற இடங்களை

குறித்து வையுங்கள்!

* அச்சடித்த புத்தகங்கள் போல்

அமைதி யோடு காத்திருங்கள்...

தேடி வரும் திருக்கரங்களில்

புத்தகமாகி

உலக நூலகத்தில்

வெற்றியாலே விருந்து வையுங்கள்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us