PUBLISHED ON : ஜன 15, 2012

அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல பாடகி கிறிஸ் வால்ரன். இவரை நேரில் பார்ப்பவர்கள், இவரின் குரலுக்கு மயங்குவதை விட, அவரின் நீளமான நகங்களைப் பார்த்துதான், ஆச்சரியப்படுவர். 18 ஆண்டுகளாக, தன் இரண்டு கை விரல்களிலும் உள்ள நகங்களை வெட்டாமல், பராமரித்து, பாதுகாத்து வருகிறார். இவரது இடது கை விரல்களில் உள்ள நகங்களின் நீளம், 10 அடி, இரண்டு அங்குலம். வலது கை விரல்களில் உள்ள நகங்கள், ஒன்பது அடி, ஏழு அங்குலம்.
ஆரம்பத்தில், ரசிகர்களை கவர்வதற்காக, நீளமான நகங்களை வளர்க்க துவங்கிய, கிறிஸ் வால்ரனுக்கு, இதன்பின், நகங்களை பராமரித்து வளர்ப்பதே, முழு நேரப் பணியாகி விட்டது. உலகின் மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண், என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில், இவரது பெயர் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது.
இவரது நகங்கள், பாம்பு போல், சுருள், சுருளாக வளர்ந்திருந்தாலும், அதை, தன் உயிரை விட மேலாக பாதுகாத்து வருகிறார். நீளமான நகங்கள் இருந்தாலும், சாப்பிடுவது, பியானோ வாசிப்பது, லேப்டாப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை, மற்றவர்களைப் போல், மிகவும் சாதாரணமாக செய்து வருகிறார்.
— ஜோல்னா பையன்.
