PUBLISHED ON : பிப் 25, 2018

அ நிறம் | அளவு
ஜப்பான் நாட்டில், பெரும்பாலானோருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. ஓய்வு நேரத்தில் மட்டுமல்லாது, ரயிலில் பயணம் செய்யும் போதும், ஓவராக குடித்து, போதை அதிகமாகி, மயங்கி விடுவர்.
இவர்கள், தாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனை தவற விட்டு, அவதிப்படுவர். இப்படிப்பட்டவர்களுக்காகவே, 'நிஷி டோக்கியோ' என்ற நிறுவனம், பிரத்யேகமான பஸ்களை இயக்கி வருகிறது. டோக்கியோவின் முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும். போதை தெளிந்த பின், இங்கு இறங்கும் பயணிகள், இந்த பஸ்ஸில் ஏறி, தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்லலாம். இதற்காக, குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
'இதுவும் ஒரு சமூக சேவை தான்...' என்கிறார், அந்த பஸ் நிறுவனத்தின் உரிமையாளர்.
—ஜோல்னாபையன்.
