PUBLISHED ON : ஏப் 13, 2014

அமெரிக்காவின், பிரபல பாப் பாடகி, லேடி காகா. ஆடலுடன், பாடலை தருவதில், கெட்டிக்காரர். ஆனால், இவரின் ஆடல், பாடலை விட, 'மேக்-அப்' மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்தால்தான், அதிகம் பிரபலமானார்.
சமீபத்தில், நியூயார்க்கில் உள்ள, 'ரோஸ்லாண்ட் பால்ரூம்' என்ற, பிரபலமான ஷாப்பிங் மாலில், தன், 28வது பிறந்த நாளை கொண்டினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இவர், காரில் இருந்து இறங்கி வந்ததை பார்த்த, ரசிகர்களும், பொதுமக்களும், ஆச்சர்யத்தில், வாய் பிளந்தவர்கள் தான், வாயை மூடுவதற்கு ரொம்ப நேரமாகி விட்டது.
உடல் முழுவதும், தெரியும ்படியான மிக மெல்லிய, உடையை அணிந்து வந் தார். தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு, அவர், உடை அணிந்திருந்ததே தெரியவில்லை.
உடலின் முக்கிய பாகங் களை மறைப்பதற்கு மட்டும், ரோஜாப்பூக்களை அணிந்திருந்தார். அதற்கு பொருத்தமாக, தலையில், ரோஸ் நிறத்திலான தொப்பி, காலில், அதே நிறத்தில் ரிப்பன் கட்டியிருந்தார். காலில் அணிந்திருந்த செருப்போ, குதிரை கால் போல், வித்தியாசமாக இருந்தது.
— ஜோல்னாபையன்.
