PUBLISHED ON : பிப் 18, 2018

அமெரிக்காவில் உள்ள லோவா நகரத்தில் வசிக்கும், டஸ்டின் பில்லார்டு என்ற விவசாயி, வித்தியாசமாக சிந்தித்து, அதன் மூலம், வருவாய் ஈட்டி வருகிறார்.
தன் பண்ணை வீட்டில், பசு, எருது உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். மிகச் சிறிய உருவமுள்ள பசுக்களை வளர்த்து, அவற்றை, பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று, பெரும் பணக்காரராகி விட்டார்.
'பல இடங்களுக்கும் சென்று, வித்தியாசமான தோற்றமுள்ள பசுக்களை வாங்குவேன். அவற்றை என் பண்ணையில் வளர்த்து, இனப் பெருக்கம் செய்ய வைத்து, அதை விற்று, காசாக்கி விடுவேன்...' என்கிறார், பில்லார்டு.
இவரது பண்ணையில் உள்ள பசு மற்றும் எருதுகள், நாயை விட சிறிய உருவத்தில் தோற்றமளிக்கின்றன. இவை, 'மைக்ரோ பசுக்கள்' என, அழைக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு வித்தியாசமாக தோற்றமளிப்பதால், வீட்டில் செல்லமாக வளர்க்க, பலரும் இவற்றை போட்டி போட்டு வாங்குகின்றனர்.
— ஜோல்னாபையன்.
