PUBLISHED ON : ஆக 30, 2015

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா அகுலியேரா, 34. இவரின் மயங்க வைக்கும் குரலுக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாட்டு பாடுவதில் மட்டுமல்லாமல், குறும்பு செய்வதிலும், கிறிஸ்டினா கெட்டிக்காரர்.
சமீபத்தில், தன் பெட்ரூம் கண்ணாடி முன், 'டாப்லெஸ்' ஆக நின்றபடி, 'செல்பி' எடுத்து, சமூக வலை தளங்களில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து விமர்சனம் எழுந்தபோது,'இதெல்லாம் என் தனிப்பட்ட விஷயம்; இதில் யாரும் தலையிட வேண்டாம்...' என, தடாலடியாக பதிலடி கொடுத்திருப்பதுடன், 'இது, ஆரம்பம் தான்...' என்றும் அதிர வைத்துள்ளார்.
— ஜோல்னாபையன்.