கமல் எழுதிய சுயசரிதை!
களத்தூர் கண்ணம்மா படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய கமல், அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தான் கடந்து வந்த சினிமா பாதையை, 'சிட்டிசன் கே' என்ற பெயரில், சுயசரிதையாக எழுதியுள்ளார். இதில், சினிமா சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கும் கமல், தன் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய, எந்த விஷயத்தையும் எழுதவில்லை. அதே சமயம், தான் வளருவதற்கு காரணமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்களைப்பற்றி அதிகமாக எழுதியுள்ளார்.
— சினிமா பொன்னையா
மீண்டும் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன்!
ராதிகா மற்றும் தேவயானி பாணியில், சின்னத்திரை நடிகையாகியிருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு, மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் தலை தூக்கியுள்ளது. இதற்கு காரணம், மாஜி கதாநாயகி மீனா. மலையாளத்தில், த்ருஷ்யம் படத்தில் நடித்த பின், அவரது மார்க்கெட் எகிறி நிற்பதால், 'நானும் வெயிட்டான அம்மா ரோல் கிடைத்தால் நடிப்பேன்...' என்று தமிழ், தெலுங்கு சினிமா நண்பர்களிடம் கூறி வருகிறார். அதோடு, தெலுங்குப்பட இயக்குனரான அவரது கணவர் கிருஷ்ணவம்சி அடுத்து இயக்கும் ஒரு த்ரில்லர் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்திலும் நடிக்கிறார். போயும் வந்ததும் பொன்னம்பலம்; திரும்பி வந்ததும் திருவம்பலம்!
- எலீசா
மகேஷ்பாபுவுக்கு சமந்தா ஆதரவு!
மகேஷ்பாபு நடித்த படங்களில், குற்றம் குறை கண்டுபிடித்து, டுவிட்டரில் செய்தி வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தவர் சமந்தா. இத்தகைய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய மகேஷ்பாபு, தன் படத்தில் அவருக்கு நாயகி வேடம் கொடுத்து, இப்போது சமந்தாவை தன் கட்சிக்காரராக மாற்றி விட்டார். விளைவு, சமீபத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளியாகியுள்ள படம் படுதோல்வியடைந்தது. அதனால், அப்படத்தை தயாரித்தவர் எனக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று, அவரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். இந்த நேரத்தில், மகேஷ்பாபுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க நினைத்த சமந்தா, 'ஒருபடம் ஓடவில்லயென்றால், அதற்கு நடிகர், நடிகைகள் பொறுப்பேற்க முடியாது; படத்தை தயாரித்தவரும், இயக்கியவரும் தான் பொறுப்பாக முடியும்...' என்று பேட்டி அளித்துள்ளார். இதனால், அப்படத்தின் தயாரிப்பாளரின் கோபம், இப்போது மகேஷ்பாபுவிடமிருந்து விலகி, சமந்தா பக்கம் திரும்பியுள்ளது.
— சி.பொ.,
விஷாலுக்கு தடை போட்ட போலீசார்!
சமீபகாலமாக, தான் எந்த அவுட்டோருக்கு சென்றாலும், அங்கு ஏதாவது புதிய படங்களின் திருட்டு, வி.சி.டி.,க்கள் விற்பனை செய்யப்பட்டால், அவர்களை கையும், களவுமாக பிடித்து, போலீசிடம் ஒப்படைத்து வந்தார் விஷால். அதையடுத்து, அவரது ரசிகர்களும் சிலரை பிடித்து, ஸ்பாட்டில் தாக்கத் துவங்கி விட்டனர். இதனால், போலீசுக்கு தலைவலியாகி விட்டது. அதனால், 'எந்த பிரச்னையாக இருந்தாலும், எங்களிடம் புகார் கொடுங்கள்; சம்பந்தப்பட்டவர்களை நாங்கள் தண்டிக்கிறோம். நீங்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள்...' என்று விஷாலிடம் கண்டிஷனாக சொல்லி விட்டனர், காவல் துறையினர். இதனால், தற்போது தன் ரசிகர்களின் கையை கட்டிப்போட்டுள்ளார் விஷால்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ரீ - என்ட்ரியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்தபோது ஓரளவு ஸ்லிம்மாக இருந்த, அங்காடித் தெரு நடிகை, இப்போது புதிய வாய்ப்புகளுக்காக மேல்தட்டு கதாநாயகர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்துவதால், அடிக்கடி மப்பு எடுத்துக் கொள்கிறார். இதனால், அம்மணியின் உடல்கட்டு நாளுக்கு நாள் பெருத்து வருகிறது. சமீபத்தில், ஒரு கமர்ஷியல் இயக்குனர் அம்மணியை அரைகுறை ஆடையில் போட்டோ செஷன் நடத்தியபோது அவரது பிரமாண்டமான தேகத்தைப் பார்த்து பிரமித்துப் போனார்.
சுள்ளான் நடிகரின், நான்கெழுத்து படத்தில் நடித்துள்ள இந்தி நடிகையை, அப்படத்தின் ஆடியோ விழாவில், 'லூசு' என்று குறிப்பிட்டார் அந்த ஒளிப்பதிவாளர் கம் இயக்குனர். மொழி தெரியாததால் அனைவரும் கைதட்டியபோது, தானும் சேர்ந்து கைத்தட்டிய நடிகைக்கு, விழா முடிந்த பின் தான் அவர் என்ன சொன்னார் என்பதே தெரிய வந்திருக்கிறது. இதனால், அந்த இயக்குனர் மீது கடுப்பான நடிகை, விழா முடிந்த பின் நடந்த பார்ட்டியில் கலந்து கொள்ளாமலேயே மும்பைக்கு பறந்து விட்டார். அதையடுத்து, பலமுறை போனில், மன்னிப்பு கேட்டும் நடிகையின் கோபம் தணியவில்லை.
துளிகள்!
* முன்னணி நடிகையாக இருந்தாலும், யாராவது புதியவர்கள் படம் எடுப்பதாக தெரிந்தால், எந்தவித ஈகோவும் பார்க்காமல், அவர்களை தேடிச் சென்று பட வேட்டை நடத்துகிறார் அஞ்சலி.
* அனேகன் படத்தின் ஒரு, 'ரொமான்ஸ்' பாடலில் படுகவர்ச்சி உடையில் நடித்திருக்கிறார், இந்தி நடிகை அமைரா.
* கல்லூரி படிப்பை முடித்து விட்ட ஷாலினியின் தங்கை ஷாம்லியும், விரைவில் கதாநாயகியாக நடிக்க வருகிறார்.
* வெங்கட் பிரபு இயக்கி வரும், மாஸ் படம், ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி, என்று கோலிவுட்டில் செய்தி பரவியுள்ளது.
அவ்ளோதான்!

