PUBLISHED ON : ஜன 10, 2016

மாதவனுக்கு கை கொடுத்த சிவகார்த்திகேயன்!
இந்தி சேனல்களில் நடித்து, பிரபலமாகி, பின், மணிரத்னத்தின், அலைபாயுதே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தவர் மாதவன். சமீபகாலமாக, அவரது சினிமா மார்க்கெட் டல்லடித்து வருகிறது. இந்நிலையில், அவர் நடித்திருக்கும், இறுதிச்சுற்று என்ற படத்தின், 'ட்ரெய்லரை' பிரபலம் ஒருவர் வெளியிட்டால், பப்ளிசிட்டி கிடைக்கும் என்று நினைத்து, சிவகார்த்திகேயனை நாடினார். அவரும், மாதவனைப் போலவே, சின்னத்திரையில் இருந்து, சினிமாவுக்கு வந்தவர் என்பதோடு, மாதவனின் தீவிர ரசிகர் என்பதால், அப்படத்தின், ட்ரெய்லரை வெளியிட்டு, அதற்கு நல்லதொரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
காஜல் அகர்வால் அறிவிக்கும் தள்ளுபடி!
சினிமாவில் நடிக்க வந்து, 10 ஆண்டுகளாகி விட்ட போதும், இப்போது வரை, கவர்ச்சி கதாநாயகி என்கிற முத்திரையிலேயே இருந்து வரும் காஜல் அகர்வாலுக்கு, வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால், சில இயக்குனர்களை சந்தித்து, தன்னை மையப்படுத்தி, கதை தயாரிக்குமாறு கேட்டு வருபவர், அப்படி தன்னை மையப்படுத்தி படம் எடுத்தால், 50 சதவீதம் சம்பளத்தை தள்ளுபடி செய்வதாக... கூறுகிறார். அண்ட நிழல் இல்லாமல் போனாலும், பேர் விருட்சம்!
— எலீசா
வரலட்சுமியின் கவர்ச்சி அவதாரம்!
பாலாவின், தாரைத்தப்பட்டை படத்துக்காக, இரண்டு ஆண்டுகள் செலவு செய்த வரலட்சுமி, தற்போது, அப்படத்தில் நடித்து முடித்து விட்டதை அடுத்து, புதிய படங்களுக்கான கதை கேட்கத் துவங்கியுள்ளார். அத்துடன், முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து விட வேண்டும் என்பதற்காக, மேல்தட்டு நடிகர்களை இயக்கும் இயக்குனர்களை சந்தித்து, பட வேட்டை நடத்துபவர், முன்னணி கதாநாயகர்களின் படங்களில், கவர்ச்சி நாயகி வேடத்தில் நடிக்கவும், தான் தயாராக இருப்பதாக முன்மொழிந்து வருகிறார்.இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
பாகிஸ்தானில் அமெரிக்க நடிகை ஏற்படுத்திய பரபரப்பு!
இந்தியில், பல படங்களில் நடித்திருப்பவர், அமெரிக்க நடிகை நர்கிஸ் பக்ரி. இவர், கவர்ச்சி உடையில், மொபைல் போன் நிறுவனத்துக்கு கொடுத்த விளம்பரங்கள், பாகிஸ்தானில் வெளியானதை அடுத்து, அங்கு, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அப்புகைப்படம் வெளியான பத்திரிகைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், 'நர்கிஸ் பக்ரி சம்பந்தப்பட்ட இந்தி படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும்...' என அரசியல் அமைப்புகள் கொடி தூக்கியுள்ளன.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
கவர்ச்சியாக நடித்தால் தான், சினிமாவில் நீண்ட காலம் வண்டியோட்ட முடியும் என்பதால், கயல் நடிகை, தன் உடல் கட்டை, கவர்ச்சிக்கு ஏற்ப மாற்றி வருகிறார். அதன்காரணமாக, சில அயல் நாட்டு சரக்குகளை குடித்து, தினமும், 'ஸ்பாட்டு'க்கு வரும் நடிகை, நள்ளிரவு பார்ட்டிகளுக்கும் சென்று, 'புல்' மப்பில் இறங்கி, அசைவ உணவுகளை பின்னி எடுக்கிறார்.
ஜிகர்தண்டா பட வில்லன், மேனன் நடிகையை, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிலையில், 'நடிகை நடித்து வெளியாக இருக்கும் ஒரு படத்தில், அவர் நடித்துள்ள கவர்ச்சி காட்சியை நீக்க வேண்டும்...' என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக, நடிகையின் சம்பளத்தில், சில லட்சங்களை விட்டுக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
பையா நடிகையின் அட்டகாசம், மீண்டும் துவங்கி விட்டது. குறிப்பாக, பையா நடிகருடன், மறுபடியும் ஜோடி சேர்ந்துள்ள நடிகை, தன் திரைமறைவு லீலைகளை, அவிழ்த்து விட்டுள்ளார். இதனால், நடிகரின் தந்தைகுலம், மறுபடியும், பலத்த செக்யூரிட்டி அனுப்பி, மகனுக்கு, பாதுகாப்பு போட்டுள்ளார்.
சினி துளிகள!
* விசாரணை படம், தன்னை சினிமாவில் பேச வைக்கும் என்று எதிர்பார்க்கிறார், நடிகை ஆனந்தி.
* தான் நடிக்கும் படங்களில், ஏதேனும், சமுதாய கருத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் பாபிசிம்ஹா.
* இந்தியில் ஷாரூக்கானுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் தமன்னா.
அவ்ளோதான்!
