தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல

இதப்படிங்க முதல்ல


PUBLISHED ON : ஜூலை 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாபா ராம்தேவ் வாழ்க்கை சினிமாவாகிறது!

யோகா குரு, பாபா ராம்தேவின் வாழ்க்கை, இந்தியில் சினிமாவாகிறது. இதில், ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் முக்கிய இடம்பெறுகிறது. இந்தக் கதையில் நடிக்க, பல நடிகர்கள் மறுத்துவிட, இப்போது சம்மதம் தெரிவித்துள்ளார் சஞ்சய் தத். இந்தியில் உருவாகும் இப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளுக்கு, 'டப்' செய்யப்பட உள்ளது.

— சினிமா பொன்னையா.

பில்லா-2வில் இளவட்ட அஜீத்!

மங்காத்தா படத்தை முடித்து விட்ட அஜீத், பில்லா-2 படத்துக்காக, தன் உடல் எடையை குறைத்து வருகிறார். காரணம், இப்படத்தின் கதை ஏற்கனவே நடித்த, பில்லா படத்தின் பிளாஷ்பேக் என்பதால், பில்லா ஆவதற்கு முன் எடுத்த முயற்சிகள், இந்த பகுதியில் இடம்பெறுகிறது. அதனால், அந்த, 'யூத்' கேரக்டருக்கு ஏற்ப உடலை குறைத்து, இளவட்டமாகி வருகிறார்.

— சி.பொ.,

டாப்ஸி உறுதிமொழி!

வந்தான் வென்றான் படத்தில் நடித்து வரும் டாப்ஸிக்கு, புதிய படமேதும், 'புக்' ஆகவில்லை. இந்நிலையில், படாதிபதிகளை நேரில் சந்தித்து, சான்சு கேட்கும் டாப்ஸி, சம்பளத்தை குறைத்து, கவர்ச்சியை அதிகப்படுத்தி நடிப்பதாகவும் உறுதி அளித்து வருகிறார். இதனால், டாப்ஸியை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்திருந்த சில டைரக்டர்கள், அந்த முடிவை மறு பரிசீலனை செய்து வருகின்றனர். அடுத்து, அடுத்து முயன்றாலும், ஆகும் நாள் தான் ஆகும்!

— எலீசா.

படாதிபதிகளை மிரட்டும் திவ்யா நாகேஷ்!

பாசக்கார நண்பர்கள் படத்தில் நாயகியாக நடித்த திவ்யா நாகேஷ், அடுத்து, மதிகெட்டான் சாலை படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், மேலும் சில பட வாய்ப்புகள் அவரை தேடிச் சென்ற போது, அதிரடியாக சம்பளம் கேட்டு, படாதிபதிகளை மிரட்டியுள்ளார். 'நடித்த படமே ஓடவில்லையே...' என்று கேட்டவர்களிடம், 'ஏன்... அருந்ததி படம் ஓடவில்லையா? அதில், சிறு வயது அனுஷ்காவாக நடித்தது நான்தானே?' என்று, அடுத்த மிரட்டலை எடுத்து விட்டிருக்கிறார். கூடம் ஒன்று போடும் முன்னே சுத்தி இரண்டு போடும்!

— எலீசா.

மும்பைவாசியான பிரகாஷ்ராஜ்!

இரண்டாவது மனைவி போனி வர்மா, மும்பைவாசி என்பதால், பிரகாஷ் ராஜும் தன் இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றி விட்டார். அதுமட்டுமின்றி, போனி வர்மாவுக்கு பெரிய அளவில், ஒரு நடனப் பள்ளியையும் உருவாக்கி கொடுத்துள்ள பிரகாஷ் ராஜ், அந்த பள்ளியை உலக தரத்துக்கு உயர்த்த அயல் நாட்டு நடன மாஸ்டர்களை பயிற்சியாளர் களாக நியமித்துள்ளார்.

— சி.பொ.,

நீச்சல் உடையில் தமன்னா!

ரட்சா என்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க, 'கமிட்' ஆன காஜல் அகர்வால், அப்பட டைரக்டர், தன்னை நீச்சல் உடையில் நடிக்க வற் புறுத்தியதால், படத்திலிருந்தே விலகி விட்டார். ஆனால், இந்த சேதி அறிந்த தமன்னா, உடனடியாக அந்த டைரக்டரை சந்தித்து, அப்படத்தில், 'கமிட்' ஆகி விட்டார். அதோடு, நீச்சல் உடையில் நடிக்கவும் முழு சம்மதம் தெரிவித்துள்ளார். சந்தடி சாக்கிலே கந்தப் பொடி காற்பணம்!

— எலீசா.

விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை!

தெய்வத் திருமகன் படத் தைத் தொடர்ந்து, சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். ராஜ பாட்டை என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், முதன் முறையாக, இரண்டு வேடங்களில் நடிக்கும் விக்ரம், இரண்டு வேடங்களையும் பிரிக்கும் மாறுபட்ட நடிப்புக்கான பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதில், விக்ரமுக்கு ஜோடியாக மித்ரா குரியன், தீபிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

— சினிமா பொன்னையா.

நமீதா போதனை!

கன்னடத்தில், ஐ லவ் யூ நமீதா என்றொரு படத்தில், யோகா டீச்சராக நடித்துள்ளார் நமீதா. செக்ஸ் வெறியில் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சீர்திருத்தும் வேடத்தில் நடித்துள்ளதால், நான் நடித்த படங்களில் இதுவே சிறந்த படம் என்று மார்தட்டி வருகிறார். இப்படம் விரைவில் தமிழுக்கும், 'டப்' செய்யப்படுகிறது. பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!

— எலீசா.

இந்தி வேண்டாம் என்று கூறி வந்த சினேகா, ரேவதி வர்மா இயக்கும் மேட் டாட் இந்திப் படத்தில், அம்மா கேரக்டரில் நடிக்கிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us