தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!

இதப்படிங்க முதல்ல!


PUBLISHED ON : ஏப் 01, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடல் படப்பிடிப்பு தொடங்கியது!

ஒரு வழியாக கவுதம் - சமந்தா நடிக்கும், கடல் படத்தின் படப்பிடிப்பை துவங்கி விட்டார் மணிரத்னம். தூத்துக்குடி - திருச்செந்தூர் பகுதியில் உள்ள, மணப்பாடு என்ற கடலோர கிராமத்தில் காட்சிகளை படமாக்கி வரும் மணிரத்னம், இப்படம் தமிழக மீனவர் பிரச்னை சம்பந்தமான கதையில் உருவாவதால், மொத்த படப்பிடிப்பையும், தமிழக கடலோர பகுதிகளிலேயே நடத்துகிறார். அதோடு, தமிழுக்கு மட்டுமே இதை படமாக்கி வருகிறார்.

—சினிமா பொன்னையா.

முத்தக் காட்சியை தவிர்க்கும் சிவகார்த்திகேயன்!

சில நடிகைகள் தான், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பதுண்டு. ஆனால், மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிறார். காரணம், 'என் படத்தை அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து முகம் சுளிக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும், கிளாமர் காட்சிகளை கூட எல்லை மீறாமல் படமாக்குமாறும் டைரக்டர்களை கேட்டுக் கொள்வேன்...' என்கிறார்.

— சி.பொ.,

லாரன்சை முற்றுகையிட்ட நடிகைகள்!

முனி-3 படத்தின் வேலை களைத் துவங்கிவிட்ட லாரன்ஸ், அதற்கடுத்து தெலுங்கில் வெளியான, ரீவெல் என்ற படத்தை, தமிழில் ரீ - மேக் செய்கிறார். இதில், இரண்டு கதாநாயகிகள் என்பதால், இங்குள்ள பல நடிகைகள், லாரன்சை முற்றுகையிட்டனர். ஆனால், 'தெலுங்கு பதிப்பில் நடித்த அதே தமன்னா, தீஷாசேத் ஆகிய நடிகைகளையே தமிழிலும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்...' என்று சொல்லி, கோலிவுட் நடிகை களை ஏமாற்றி விட்டார் லாரன்ஸ்.

— சி.பொ.,


மாப்பிள்ளை தேடும் நமீதா!

கல்யாண வயதை எட்டிவிட்ட நமீதாவுக்கு, அவர் ஒரு பக்கம், அவரது பெற்றோர் ஒரு பக்கம் என, தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர். 'எந்த மாதிரி மாப்பிள்ளையை தேடுகின்றனர்?' என்று நமீதாவைக் கேட்டால், 'நல்ல கருப்பு நிறம் கொண்ட என்னை விட உயரமானவரை தேடுகிறேன். அதோடு, என்னை காலமெல்லாம் காதலிப்பவராக, இனிமையாக பழகக் கூடியவராகவும், என் மீது சந்தேகம் கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நல்லதொரு வரனை என் குடும்பமே முழு வீச்சில் தேடிக் கொண்டிருக்கிறது...' என்கிறார். காலத்தே பயிர் செய்!

— எலீசா.

டூ-பீஸ் நடிகை டாப்சி!

ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில், அடக்கம் ஒடுக்க மாக நடித்த டாப்சி, தற்போது, தெலுங்கிலிருந்து தமிழுக்கு வரும், வீரய்யா என்ற படத்தில், டூ - பீஸ் நடிகையாகி, அதிரடி ஆட்டம் போட்டுள்ளார். இந்த சூட்டோடு தமிழிலும் சூடு காட்டும் நடிகையாக பிரவேசிக்க, சில கமர்ஷியல் படாதிபதிகளை சந்தித்து, பட வேட்டை நடத்தி வருகிறார் டாப்சி. அதே சமயம், குத்தாட்டத்துக்கு மட்டும் நோ - என்ட்ரி வைத்துள்ளார் நடிகை. சுற்றிச் சுற்றி சுங்கச் சாவடிக்கே வந்தது போல!

— எலீசா.

ஹன்சிகாவுக்கு கனவு நாயகி பட்டம்!

கடந்த 2011ல், பெருவாரியான ரசிகர்களின் கனவு நாயகியாக திகழ்ந்தவர் ஹன்சிகா மோத்வானிதான் என்று, அவருக்கு சிங்கப்பூர் தமிழ் சங்கம், 'கனவு நாயகி' என்ற பட்டத்தை வழங்கி உள்ளது. இதனால், உற்சாகத் தில் இருக்கும் ஹன்சிகா, 2012க்கான படங்களிலும் ரசிகர்களை கவரும் வகையில் நடித்து, தொடர்ந்து இந்த பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆசைக்கு இல்லை அளவென்ற எல்லை!

— எலீசா.

பின்லேடன் கதையில் ஷபானா ஆஸ்மி!

அமெரிக்க படையால் கொல்லப்பட்ட பின்லேடனை பற்றிய கதையில், இந்தியில் ஒரு படம் உருவாகிறது. இதில், பாகிஸ்தானில், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை படமாக்குவதால், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, சில பாகிஸ்தான் நடிகைகளை கேட்டனர். ஆனால், அவர்கள் யாரும் உடன்படவில்லை. அதனால், அந்த வேடத்தில் தான் நடிப்பதாக துணிச்சலாக முன் வந்துள்ளார் பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி.

—சினிமா பொன்னையா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us