தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 20, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உண்மை காதலை அறிய...

என் நண்பரின் மகள், தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறாள். அதே வங்கியின், வேறு ஒரு கிளையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இந்த வங்கிக்கு பணி நிமித்தமாக வந்துள்ளார். வந்தவருக்கு, என் நண்பரின் மகள் மேல், ஒரு காதல் பார்வை விழுந்துள்ளது.

இதனால், ஏதாவது ரெக்கார்டுகளை எடுத்து வரச் சொல்வது, அதைப்பற்றி விசாரிப்பது போல், அப்பெண்ணிடம் அதிக அளவில் பேசி உள்ளார். தன் வங்கிக்கு சென்ற பிறகும், போனில் தொடர்பு கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டு, தினசரி காலை வணக்கம், சந்தேகம் தெளிவுபடுத்துதல் என, போன் தொடர்பை வளர்த்துள்ளார்.

ஒரு நாள், போன் மூலம் தன் காதலை கூற, அப்பெண், காதலை ஏற்கவும் இல்லை; நிராகரிக்கவும் இல்லை.

ஒரு சமயம், ஆடிட் விஷயமாக வந்தவர், நேரிடையாகவே தன் காதலை கூறி, 'நீ இல்லை என்றால், என்னால் வாழ முடியாது. நான் செத்து விடுவேன்...' என, டயலாக் பேச, அப்பெண் ஒரு சிரிப்பை சிரித்து விட்டு வந்தாள்.

இவ்விஷயத்தை வீட்டில் சொன்னால், வங்கி அதிகாரிக்கும் பிரச்னை வரும்; இவளையும் வேலையை விட்டு நிற்க சொல்லி விடுவர். நிறுவன உயர் அதிகாரிகளிடம் சொன்னால், அவருக்கு வேலை போய் விடும். என்ன செய்வது என யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தாள்.

அடுத்த நாள், அவர் போனில் பேசிய போது, 'இன்று மாலை வங்கிக்கு வாருங்கள்; பேசுவோம்...' என கூற, அந்த அதிகாரிக்கு மகிழ்ச்சி. சொல்லி வைத்தாற்போல், மாலை அதிகாரி வர, 'நீங்கள் உண்மையிலேயே காதலிக்கிறீர்களா?' என, அப்பெண் கேட்க, அவரோ, 'உனக்காக உயிரையே கொடுப்பேன்...' என, காதல் வசனம் பேசியுள்ளார்.

இவளோ, 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்... என் பெயரில், ஆறு சென்ட் இடம் வாங்கி தாருங்கள், இல்லையென்றால் என் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் செலுத்துங்கள்...' எனக் கூறி உள்ளாள். அதற்கு அதிகாரியோ, 'அதனால் என்ன, இந்த மாதமே அதை செய்து விடுகிறேன்...' எனக் கூறி சென்றவர் தான்; இன்று வரை பதில் இல்லை; வருடம் ஒன்று கடந்து விட்டது.

என் நண்பரின் மகள், புத்திசாலித்தனத்தால் இந்த மாதிரியான, 'ஜொள்' பார்ட்டிகளிடமிருந்து தப்பித்துக் கொண்டாள்.

மேற்படி நிகழ்ச்சி, கண்டதும் காதல் கொள்ளும் அரைகுறைகளுக்கு ஒரு படிப்பினை; காதலை நிராகரிக்க சிறந்த வழி இது தான்!

— எம்.எஸ்.வி.அருண், தென்காசி.

'பேமஸ் ப்ளே பாய்!'

என் தோழி, கிராமத்துப் பெண் எனினும், ஆங்கில நாட்டம் அதிகம் கொண்டவள். அவளது மகன், ஒன்பதாம் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பிற்குச் செல்கிறான்.

சமீபத்தில், அவளைச் சந்தித்த போது, அவள் மகனைக் குறித்தும் விசாரித்தேன்.

'வெரி நைஸ்... ஹீ இஸ் பேமஸ் ப்ளே பாய் இன் ஹிஸ் ஸ்கூல்...' என்றாள் தோழி. 'உன் ஆங்கில ஆர்வத்துக்கு அளவே கிடையாதா... நீ சொன்னதன் அர்த்தம் தெரியுமா... 'ப்ளே பாய்' என்றால், கிட்டத்தட்ட பொம்பளை பொறுக்கி என அர்த்தம்...' என்று விளக்கினேன்.

'ப்ளே பாய்னா, விளையாடுற பையன் இல்லையா... அவங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ்ல, அவன் நிறைய மெடல் வாங்கியிருக்கிறான். அதைத் தான் சொன்னேன்...' என்றாள்.

'ஆங்கிலத்தில் வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் எடுத்து, வாக்கியம் அமைத்து பேசுவது, பல சந்தர்ப்பங்களில் பொருத்தமாக இருக்காது...' என எடுத்துக் கூறி, அவளை முறையான ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பிற்குச் செல்ல அறிவுறுத்தினேன்.

ஆங்கில ஆர்வலர்களே... பேச்சில் கவனம் தேவை. இல்லையேல், அர்த்தம் அனர்த்தம் ஆகி விடும்.

— ஆர். தேன்மொழி, கல்லிடைக்குறிச்சி.

சந்தேக புத்தியால் நின்ற திருமணம்!

சென்னையில் வசிக்கும், உறவினர் பெண் ஒருத்திக்கு, மாப்பிள்ளை பார்த்தனர். நிச்சய தார்த்த தேதி குறிக்கப்பட்டது. இதற்கிடையில், கிராமத்தில் வசிக்கும் அந்தப் பையன், இவளை மொபைலில் தொடர்பு கொண்டு, 'உங்க ஆபீசில் எல்லாருமே லேடீஸ் தானா, யார் கூட போவ, வருவ...' என்று, சந்தேகக் கண்ணோட்டத்துடன், கேள்விக் கணைகளைத் தொடுக்க, உஷாரான அந்தப் பெண், 'நிறுத்துங்கள் நிச்சயதார்த்தத்தை...' என, பெற்றோரிடம் கூறி விட் டாள்.

அவர்களும், பையனின் சந் தேகப் பார்வையை உணர்ந்து, அந்த சம்பந்தத்திற்கு, 'டாடா' சொல்லி அனுப்பி விட்டனர். (மகளுக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே என வேதனைப் பட்டது வேறு விஷயம்!)

அந்தப் பெண்ணோ, 'இப் பவே இப்படி என்றால், திரு மணத்திற்கு பின், என்னென்ன கேட்பான்; தப்பித்தது தலை...' என, மகிழ்ச்சியில் துள்ளினாள்.

இவளது பெற்றோர் சம்மதித் ததால், எல்லாம் சுமுகமாக முடிந்தது; இல்லையென்றால்? வயது போனால் பரவாயில்லை; இவர் போன்றவர்களை திரு மணம் செய்து கொண்டால், வாழ்க்கையே போய் விடுமே; சிந்திப்பரா?

— எஸ். தாமஸ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us