PUBLISHED ON : அக் 07, 2012

அ நிறம் | அளவு
வாழ்க்கையில் நடிக்க வேண்டாமே...
'என்ன மச்சி, இப்பவெல்லாம் நம்ம கூட்டணியில் இருந்தே ஒதுங்குறே! பான்பராக், 'தண்ணி'யெல்லாம் கூட விட்டுட்டே போலிருக்கு... அடிக்கடி கோவிலுக்கெல்லாம் வேற போயிருக்க...' என, ஒரு இளைஞர் கேட்க, அதற்கு அவருக்கு அருகிலிருந்த இளைஞர், 'எனக்கு கல்யாணம் செய்ய எங்க வீட்ல பெண் பார்த்திருக்காங்க. பெண்ணோட அப்பன் ரொம்ப ஷார்ப்பான ஆளாம். என்னை பத்தி தெரிஞ்சிக்க, ஆள் வச்சு வேவு பார்த்தாலும் பார்ப்பான்னு கேள்விப் பட்டேன். அதான் கொஞ்ச நாளைக்கு இப்படி வேஷம் போட வேண்டியிருக்கு...' என சொல்ல, ஒரு கணம் நான் அதிர்ந்து போனேன்.
இப்படிப்பட்ட இளைஞர்கள், தீய பழக்க வழக்கங்களை நிரந்தரமாக கைகழுவி, திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், திருமணம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். நல்லவன் போல் நடித்து, பெண் வீட்டாரை ஏமாற்றுவது எத்தனை பெரிய நம்பிக்கைத் துரோகம்!
ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்தால், வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டு, மன நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டியது தான். சிந்தியுங்கள் இளைஞர்களே!
— ரா.சாந்தகுமார், ஆவடி.
வித்தியாசமான வீட்டுக்காரர்!
கடந்த மூன்று மாதங்களாக, வாடகைக்கு வீடு தேடி அலைந்து, எதுவுமே அமையவில்லை. எங்களுக்கு ஏற்ற வீடு இருந்த போதிலும், வீட்டுக்காரர் மறுப்பு தெரிவித்ததற்கு காரணம், எங்களது அதிக எண்ணிக்கை கொண்ட கூட்டு குடும்பம் என்பதே. கடைசியில், ஒரு வயோதிக தம்பதியரின் வீட்டைப் பார்த்தபோது. எங்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து போனது. உரிமையாளரான அந்த பாட்டியம்மா, 'உங்கள் குடும்ப நபர்கள் எத்தனை பேர்?' என்று கேட்டார், சற்று தயக்கத்தோடு, 'ஒன்பது பேர்' என்ற போது, அந்த பாட்டியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. 'அப்படின்னா, வீடு உங்களுக்குத்தான், நல்ல நாளா பார்த்து, பால் காய்ச்சிடுங்க...' என்று முன் பணத்தை பெற்றுக் கொண்டார். எங்களுக்கு இன்ப அதிர்ச்சி.பால் காய்ச்சி முடித்ததும், என் அண்ணி அந்த பாட்டியிடம், 'நிறைய பேர் இருந்தா, வீடு குடுக்க தயங்குறாங்களே... நீங்க மட்டும் உடனே சம்மதிச்சுட்டிங்களே, ஏன்?' என்றார். அதற்கு அந்த பாட்டியம்மா, 'என் பையன், வெளிநாட்டில் இருக்கான்; என் பொண்ணு ஐதராபாத்ல இருக்கா. நாங்க ரெண்டு பேர் மட்டும் மாடியில தங்கியிருக்கோம், ரொம்ப தனிமையா உணர்றோம்.
'நிறைய பேர் இருக்கிற குடும்பமா இருந்தா, எப்போதும் வீடு கலகலப்பா, மங்களகரமா இருக்கும். அதோட, எங் களுக்கு ஒத்தாசையாவும் இருக்கும். எல்லாத்துக்கும் மேல, அதுதானே பாதுகாப் பும் கூட...' என்றார்.
மின் செலவு, தண்ணீர் செலவு, தேய்மானம், என சின்ன குடித்தனத்திற்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் பெரும்பாலானோர் மத்தியில், அந்த முதிய தம்பதியரின் வித்தியாச மான அணுகுமுறை, எங் களுக்கு மிகவும் பிடித் திருந்தது. அதோடு, எங்கள் குடும்பத்தில் ஒருவராக அவர்களையும் நேசிக்க துவங்கி விட்டோம்.
— சி.பிரபு, சென்னை.
ஆம்புலன்ஸ் அட்டகாசம்!
சமீபத்தில், சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில், காலை, 9.30 மணிக்கு, வேனில் அலுவலகம் சென்று கொண்டிருந்தோம்.அப்போது, எங்களுக்கு பின்புறம் ஆம்புலன்ஸ் ஒன்று வருவதை, அதன் சைரன் சப்தம் மூலம் அறிந்தோம். அந்த நேரத்தில், அங்கு எவ்வளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எங்கள் வேனில் இருந்த பலர், கண்ணை மூடி பிரார்த்தனை செய்ய, மற்றவர்கள் எங்கள் டிரைவரிடம் இப்படி போ, அப்படி போ என, வழிவிட சொல்லி அறிவுரை கூறினர். ஆம்புலன்ஸ் எங்களை தாண்டி செல்லும் போது, அனைவரும் எட்டி பார்க்க, கருப்பு நிற ஷீட்டால் கண்ணாடி மறைக்கப் பட்டிருந்தது. நாங்களும், இது கூட நல்லதுதான் என பேசிக் கொண்டோம்.
ஐந்து நிமிடங்களுக்கு பின், மேம்பாலம் தாண்டி அடுத்த தெரு வரும்போது, ஆம்புலன்சின் ஜன்னல் திறக்கப்பட்டு, சைரன் நிறுத்தப்பட்டு நிதானமாக போய் கொண்டிருந்தது. வண்டியின் ஜன்னல் திறக்கப்பட்டிருந்தது. உள்ளே ஆட்டு மந்தையாக இளம் வயது நர்ஸ்கள் இருந்தனர்.
எங்கள் அனைவரின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். அவசியம், அவசரம் என்பதை, அனா வசியத்துக்கு பயன்படுத்தும் இவர்களை என்ன செய்தால் தகும்?
மனசாட்சியுடன் நடந்து கொள்வார்களா, இப்படிப் பட்டவர்கள்?
— எஸ்.பிரபாஸ்ரீ, சாலிகிராமம்.
