தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 14, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம தான் எப்பவும் ஒஸ்தி!

காலையில் அலுவலகத்திற்கு செல்ல, பேருந்திற்காக காத்திருந்தேன். அந்த நேரம், தனியார் பேருந்து வரவே, அதில் பயணித்தேன். முதலில் மெதுவாக சென்ற வண்டி, திடீரென அதிக வேகத்தில் பறந்தது.

போருந்து போகும் வழியில் பிரபலமான பள்ளிக் கூடம் ஒன்று இருந்தது. பள்ளிக்கூடத்திற்கு நேரமாவதால் தான், இவ்வாறு வேகமாகச் செல்கின்றனர் என, நினைத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் பள்ளிக்கூட நிறுத்தம் தாண்டியும், பேருந்து அதிவேகத் தில் சென்று கொண்டிருந்தது. பயணிப்பவர் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இவ்வாறு அதிவேகத்தில் சென்று, பேருந்து நிலையத்தில் பெரும் சப்தத்துடன் நின்றது.

பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், நடத்துனரிடம், 'பார்த்தியா... நாம தான் எப்பவும் ஒஸ்தி. இப்ப தான் அரசாங்க பேருந்து, பின்னால வருது...' என கூறி, சிரித்தபடி இறங்கி சென்றார். முதலில் மெதுவாக சென்ற வண்டி, திடீரென அதிகமான வேகத்தில் சென்றதற்கு காரணம், பின்னே வந்த அரசாங்க பேருந்து தான் என புரிந்தது.

அரசாங்க பேருந்தை விட, தங்கள் பேருந்து தான் முதலில் பேருந்து நிலையம் வர வேண்டும் எனவும், அப்போது தான் அதிகமான டிக்கெட்டுகளை ஏற்ற முடியும் எனவும், பேருந்தை, போட்டிப் போட்டு ஓட்டியுள்ளார். பேருந்தில் எந்த விஷயத்தில் போட்டிப் போடுவது என்ற விவஸ்தை இல்லையா? ஒரு வேளை அதிவேகத்தில் சென்ற பேருந்து, ஏதாவது ஆபத்தில் சிக்கினால், ஓட்டுனருடன் சேர்ந்து, பயணிப்பவர் உயிருக்கும் ஆபத்தாகும் நிலைமை ஏற்படலாம். 'வேகம் விவேகமல்ல' என்று எழுதி வைத்தால் மட்டும் போதுமா?

— கா.கணேஷ்குமார், சிவகாசி.

ஓடி விளையாடாதே பாப்பா!

எனக்கு வயது 52. பள்ளிக் கல்வியையும், கல்லூரி படிப்பையும் கிறிஸ்தவ கல்விக்கூடங்களில் படித்தவன் நான். அங்கெல்லாம் ஏராளமான தாராளமான விளையாட்டு மைதானங்கள் இருந்தன. ஹாக்கி, புட்பால், பேஸ்கட் பால் என அனைத்து விளையாட்டுகளையும் விளையாடி களித்திருக்கிறோம். பார்வையாளராய் ரசித்தும் இருக்கிறோம். கடந்த நாற்பது வருடங்களில் தமிழகத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் வலம் வந்து விட்டேன். அவர்கள் மெதுமெதுவாக விளையாட்டு மைதானங்களை, புதுப்புது கட்டடங்களால் விழுங்கி விட்டனர். ஏற்கனவே கிரிக்கெட்டாலும், திரைப்படங்களாலும் செயற்கை கோள் அலைவரிசைகளாலும், தமிழ் இளைஞர்களின் விளையாடும் சுகம் திருடப்பட்டு விட்டது. இளைஞர்கள் மாமிச மலைகளாய் திரிகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் விளையாட்டு கொள்கைகளை மறுபரீசிலனை செய்ய வேண்டும்; போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லாத கல்விக் கூடங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; வருடத்திற்கு, 36 நாட்களுக்கு மேல் எவ்வகை கிரிக்கெட்டும் இந்தியாவில் நடைபெறாத அளவுக்கு கிரிகெட்டை கட்டுப்படுத்த வேண்டும். செய்வார்களா?

— ஆர்.சுடலைமுத்து, சின்னாளப்பட்டி.

உண்மையான ரோல் மாடல்!

நான் சமீபத்தில், என் தோழியின் அழைப்பை ஏற்று, அவளது கிராமத்தில் நடை பெற்ற விழாவிற்கு சென்றிருந்தேன். விழா நடைபெற்ற, மூன்று நாட்களும், அங்கேயே தங்கியிருந்து கோவில் வழிபாடு, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என, அனைத்தையும் கண்டு மனம் மகிழ்ந்தேன். உண்மையில், ஒரு விஷயத்தை நினைத்து, அந்த ஊர் மக்களை வியந்து பாராட்ட வேண்டும் போலிருந்தது.

அங்கு நடைபெற்ற எல்லா விழாக்களின் நிகழ்ச்சிகளிலும், இரு இளைஞர்களையும், ஒரு இளம்பெண்ணையும் முன்னிறுத்தி அவர்களை பாராட்டியே, அவர்களின் கருத்துக்களை வெளிப் படுத்தும் வகையில், நிகழ்ச்சிகள் அனைத்தும் நடை பெற்றன.

என் தோழியிடம் விவரம் கேட்டபோது, 'எங்கள் ஊரில் படித்து முன்னேறியவர்கள் மிக குறைவு. சென்ற ஆண்டு குரூப் 2 தேர்வில், ஒரு பெண்ணும், இன்னொரு இளைஞர் மரைன் இன்ஜினியரிங் முடித்து வெளிநாட்டிலும், மற்றொரு இளைஞர் ராணுவத்திற்கும் தேர்வாயினர். இதனால், எங்கள் ஊரின் பெரியவர்களுக்கு, கல்வியின் மீது ஆர்வம் அதிகரித்தது. அத்தோடு, அவர்களை வரவழைத்து, இந்தாண்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும், அந்த மூன்று பேரின் முன்னிலையிலேயே நடத்த முடிவெடுத்தனர். எனவே, எங்களது ஊருக்கு, அவர்கள் தான் ரோல் மாடல்...' என்றாள்.

சொந்த ஊரில் கண்ணெதிரே... கல்வியால் முன்னேறி காட்டியவர்களை கவுரவிப்பதும், பெருமைப்படுத்துவதும் ஆரோக்கியமான விஷயம் தானே!

— பி.யோசிகா, மதுரை.

'மார்வாடி' கடைகளும், 'மால்'களும்!

நீங்கள் மார்வாடி கடைகளில், நகையை அடகு வைத்திருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த அனுபவம் உங்களுக்குக் கிட்டியிருக்கும். உங்கள் நகைக்கு ஈடாக கொடுக்கும் தொகைக்கு, ஒரு மாத வட்டியைப் பிடித்துக் கொள்வதோடு, அந்த ரசீதுக்காக இரண்டு ரூபாயையும் சேர்த்துக் கழித்துக் கொண்டுதான், மீதியைக் கொடுப்பார்.

பத்து ரூபாய் செலவில் அச்சிடும், 100 ரசீதுகளுக்கு, 200 ரூபாய் வசூலித்து விடுவார் மார்வாடி. அதே போன்றதொரு, 'கொள்ளை' சமீபகாலமாக, 'மால்'களிலும் துவங்கி உள்ளது.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழிக்கிறோம் என்ற சாக்கில், ஒரு கேரி பேக்குக்கு இரண்டு ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை வசூல் வேட்டையாடத் துவங்கி இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழிக்க வேண்டும், அரசின் முடிவை கடைபிடிக்க வேண்டும் என்று, கடைக்காரர்கள் உண்மையிலேயே விரும்பினால், அவர்களே, பொருட்களை துணிப் பையில் போட்டுக் கொடுக்க வேண்டும். முன்பு அப்படித்தானே கொடுத்துக் கொண்டிருந்தனர்!

அதைவிடுத்து, அரசின் கொள்கையைக் கடைபிடிக்கிறோம் என்ற கோணத்தில், வாடிக்கையாளர்களின் தலையில் மிளகாய் அரைப் பது நியாயமா?

— ஏ.சி.திரிலோக சந்தர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us