sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : மார் 31, 2013

Google News

PUBLISHED ON : மார் 31, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது மாப்பிள்ளைகளே....

பக்கத்து வீட்டு பையனுக்கு, கிராமிய சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து, சில தினங்களாகியும், புது மணப்பெண், 'மூட் - அவுட்'டாகவே இருந்திருக்கிறாள். மாப்பிள்ளையிடமும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை. தகவலறிந்து, ஊரிலிருந்து வந்த பெண் வீட்டார், 'யாரோ பில்லி சூன்யம் செய்து விட்டனர்...' என புலம்பினர்.

இதற்கிடையே, புதுமண தம்பதியரை, மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து போய் காண்பித்திருக்கின்றனர். அங்கு, இருவருக்கும் தனித்தனியே கவுன்சிலிங் நடத்திய பிறகே, புதுமணப் பெண், கணவனோடு தேனிலவு செல்ல சம்மதித்திருக்கிறாள்.

இதற்கு காரணம், மாப்பிள்ளையின் தவறான அணுகுமுறைதான்...

மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர், 'முதல் இரவில் வீரமாக செயல்படும் புருஷனையே, பெண்கள் அதிகம் விரும்புவர். மனதை அலைபாய விட மாட்டார்கள்...' என்றெல்லாம் கூறி, குழப்பியிருக்கின்றனர். மாப்பிள்ளை பையனும், தன் இளம் மனைவியை அசத்தி விட வேண்டுமென்ற வெறியில், முதலிரவில் சற்று முரட்டுத்தனமாகவே நடந்திருக்கிறார்.

அதிர்ச்சியுற்ற அந்த கிராமத்துப் பெண், இப்படித்தான் ஒவ்வொரு நாள் இரவுப் பொழுதும் இருக்குமோ என அஞ்சி, 'அந்த' விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் விலகியே சென்றிருக்கிறாள். புது மாப்பிள்ளைகளே... பூவை போன்று மென்மையான பெண்

களிடம் இரவில் மென்மையாகவே நடந்து கொள்ளுங்கள்.

பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகர்.

இப்படியும் ஒரு எதிர்பார்ப்பா?

என் நெருங்கிய நண்பருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நண்பர், சமீபத்தில் தன் மகனுக்கு, சென்னையில் விமரிசையாக திருமணம் செய்து வைத்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமண வைபவத்திற்கு நான் செல்லவில்லை.

ஒரு விடுமுறை நாளில், சென்னைக்கு சென்று, நண்பரின் குடும்பத்தினரையும், புது மணமக்களையும் சந்தித்து, வாழ்த்துகள் கூறி, பரிசு வழங்கினேன்.

நண்பர், தன் மகளுக்கும் கூடிய விரைவில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும், நல்ல குடும்ப சூழ்நிலையில், படித்த மாப்பிள்ளை ஜாதகம் வந்தால், தன்னிடம் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். அப்போது சமையலறையிலிருந்து வெளியே வந்த நண்பரின் மகள், தனக்கு வரப்போகும் கணவரும், அவருடைய குடும்ப சூழ்நிலையும், எப்படியிருக்க வேண்டும் என்று, என்னிடம் பட்டியலிட்டு கூறிய போது, அதிர்ந்து போனேன். அவளது எதிர்பார்ப்பு என்னவென்றால்...

* மாப்பிள்ளை, வியாபாரமோ, சொந்த தொழிலோ செய்யக் கூடாது.

* இன்ஜினியரிங் படித்து, ஐ.டி., கம்பெனியில் வேலை செய்ய வேண்டும்.

* வெளிநாட்டிற்கு செல்லவோ அல்லது அங்கேயே தங்கியிருக்கவோ வாய்ப்புகள் இருக்க வேண்டும்.

* மாமனார் மாமியாருடன் இல்லாமல், தனிக்குடித்தனமாக இருக்க வேண்டும்.

* மிக முக்கியமாக, மாப்பிள்ளைக்கு சகோதரிகள் இருக்கவே கூடாது.

இவற்றைக் கேட்ட நான், நண்பரின் முகத்தை பார்த்தேன். தன் கட்டுப்பாட்டிற்கு மீறிய விஷயம் இது என்று வருத்தத்துடன் கூறினார்.

நண்பரின் மகள் எதிர்பார்ப்பது போல், அவளது அண்ணி, தன் பெற்றோரிடம் இப்படி கண்டிஷன் போட்டிருந்தால், எப்படி திருமணம் நடந்திருக்கும். ஒவ்வொரு பெண்ணும், தனக்கு நாத்தனார் இல்லாத வீட்டில் தான் திருமணமாக வேண்டும் என்று மேற்கூறிய கண்டிஷன்கள் போட்டால், பெண்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று, என்னால் யோசிக்க முடியவில்லை.

பெண்கள் பொறுமைசாலிகள் எனும் கருத்தை, இந்த காலத்து படித்த பெண்களில் சிலர் பொய்யாக்கிக் கொண்டு இருக்கின்றனரே!

எஸ்.கே.நாகேந்திரன், மதுரை.

வளர்க்கலாமா வன்முறையை?

ஒரு ஞாயிற்றுக்கிழமை, என் அம்மாவுடன் பக்கத்து ஊர் சந்தைக்கு (வாடிப்பட்டி) சென்றிருந்தேன். தேசிய நெடுஞ்சாலை சந்திப்பின் அருகே முக்கிய பிரமுகரின் குழந்தைகளுக்கு காதணி விழாவை முன்னிட்டு, பிரமாண்டமான கட்-அவுட் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ஒருபுறம் அபிமான நடிகர் ஒருவரின் படமும், மற்றொரு ஓரத்தில் ஜாதி தலைவர் ஒருவரின் படமும், நடுவில் குடும்பத்தினர் படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால்...

நடுவில் காதணி விழாவிற்கான இரண்டு மற்றும் மூன்று வயது இரு குழந்தைகளின் கையில், அரிவாள் மற்றும் வாள் பிடித்தவாறு அச்சிடப்பட்டு, அதன் அருகே வீரம் சம்பந்தப்பட்ட வசனமும் இடம் பெற்றிருந்தது. இதைக் கண்டு முதலில் அதிர்ந்து போன என் அம்மா, என்னிடம் காட்டி, 'இந்த வயசிலேயே இந்த குழந்தைகளுக்கு ஆயுதத்தை பிடிக்கச் செய்து, வன்முறையை வளர்க்கின்றனரே...' என்று வருத்தப்பட்டார்.

சினிமா, வீடியோ கேம், இன்டர்நெட் போன்றவற்றில் வன்முறை தலை விரித்தாடுவது போதாதென்று, வீரம் என்ற பெயரில், ஆயுத கலாசாரத்தை குழந்தை களுக்கு புகுத்தலாமா? அன்பு வழியில், அறவழியில் செல்வது, இக்காலத்தில் அநாகரிகம் போல் ஆகிவிட்டதே என, மனதிற்குள் நொந்து போனேன்.

பி.போத்திராஜா, எஸ்.பெருமாள்பட்டி.



உலோகங்களால் உபத்திரவம்!

நண்பர் வீட்டுக்குச் சென்றபோது, என்னை வரவேற்ற பின், ஒரு பாத்திரம் நிறைய சில்லரைக் காசுகளைப் போட்டு, அதில் ஒரு பாட்டிலில் இருந்த நீரை ஊற்றி, கைகளால் அந்தக்காசுகளை அலசி, பின் சிறிய துணியால், ஒவ்வொன்றாக நன்கு துடைத்து, மற்றொரு பையில் போட்டு கொண்டிருந்தார். நான் அன்றைய தினசரிகளைப் படித்தவாறு, அவரது செய்கையையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரது வேலை முடிந்த பின், என் பக்கம் திரும்பி, நான் விளக்கம் கேட்பதற்கு முன், அவராகவே துவங்கினார்.

'வேறொன்றுமில்லை நமக்கு வரும் சில்லரைக் காசுகள் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்றன. உதாரணமாக மீன், இறைச்சிக்கடைகள், எண்ணெய் மற்றும் பலகாரம் விற்கும் கடைகள் போன்றவைகளும் அடக்கம். இந்தக் காசுகளில், அந்தந்த வியாபாரத்திற்கான பொருட்களின் துகள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்லாமல் தற்போது பெரும் சில்லரைத் தட்டுபாடும் நிலவுவதால், பல இடங்களில் பிச்சைக்காரர்களிடமிருந்து, 95 ரூபாய் வாங்கி கொண்டு, 100 கொடுக்கும் கமிஷன் வியாபாரமும் நடக்கிறது. அவர்களில் பெரும் வியாதிக்காரர்களும் உண்டு. பணத்தைக் கொடுத்து பொருள் வாங்கிய பின், மீதி சில்லரை வாங்குவோர், இது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. பையில் போட்டு சென்று விடுகின்றனர்.

உலோகங்கள் மூலம் தோல் வியாதிகள் பரவுவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஒரு மருத்துவக் குறிப்பு மூலம் அறிந்தேன். அதுவும் இப்படி உலோகங்கள் மூலம் தீவிரமடையும் வாய்ப்புள்ளது என்றும் படித்தேன். அதற்குப் பின், இப்படிப்பட்ட பாதுகாப்பான வழியை நாடுகிறேன்...' என்றார்.

'அது சரி... இதென்ன, பாட்டிலில் ஏதோ பினாயில் வாசனை வருகிறதே...' என்றேன்.

'பினாயில்தான், அத்துடன் இரண்டு ஸ்பூன் பிளீச்சிங் பவுடர், நான்கு சொட்டு டெட்டால், இரண்டு லிட்டர் தண்ணீர் எல்லாம் கலந்துள்ளேன்...' என்று, 'டிவி' சமையல் குறிப்பு போல் விளக்கினார்.

நண்பரின் செயல், சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும், பார்ப்பவர்கள் பின்பற்ற நினைக்கும் வகையில், அவரது நுட்பமான எச்சரிக்கை உணர்வு என்னை வியக்க வைத்தது.

எஸ்.ஸ்ரீதர், புதுபெருங்களத்தூர்.

இதற்கும் சட்டம் வேண்டும்!

சமீபத்தில், என் ஆபீஸ் நண்பர் ஒருவரை, சாலை ஓரமாய் போய் கொண்டிருக்கும் போதே, கார் ஒன்று இடித்து கீழே தள்ளிவிட்டது. காரை ஓட்டி வந்தது எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர். தடிமனான கண்ணாடியணிந்த அவர், கீழே விழுந்த என் நண்பரின் காலில் விழாத குறை. 'நான் வயதானவன், கண் சரியாக தெரியவில்லை...' என்று கெஞ்சி இருக்கிறார். நண்பர், கை மற்றும் கால்களில் அடிபட்ட நிலையிலும், போனால் போகிறது என்று விட்டுவிட்டார்.

ஒன்று மட்டும் புரியவில்லை. பதினெட்டு வயதுக்கு கீழ் வண்டி ஓட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அது போல, அறுபத்தைந்து வயதுக்கு மேல் வண்டி ஓட்ட கூடாது என்று ஏன் சட்டம் போடக்கூடாது? பஞ்சடைத்த பார்வையுடனும், டமார காதுகளுடனும் நிறைய வயதான வம்பர்கள், கார்களையும், பைக்குகளையும் ஜம்பமாக ஓட்டி, பல உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொண்டிருக் கின்றனர்.

எம்.ஆர்.ஆனந்த், சென்னை.






      Dinamalar
      Follow us