தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தரங்கத்தை அம்பலப்படுத்தாதீர்!

திருமணம் ஆன என்தோழி என்னிடம் எல்லா விஷயங்களையும் சகஜமாக பேசுவாள், இருவரும் திருமணம் ஆனவர்கள் என்பதால், பெண்களுக்கு மட்டுமே உரிய விஷயங்களை, மனம் விட்டு பேசிக் கொள்வோம்.

ஒருமுறை, மிகவும் அந்தரங்கமான விஷயத்தை (படுக்கை அறையில் அவள் கணவர், அவளிடம் நடந்து கொள்ளும் விதம்) வெட்கமின்றி பேசியதோடு, நானும், அது போல என் அனுபவத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, எதிர்பார்த்தாள். நானோ, கழுவிய மீனில், நழுவிய மீனாக பேச்சை திசை திருப்பி விட்டு விட்டேன்.

உற்ற தோழியாக இருந்தாலும், பேச்சில் வரைமுறை இருக்க வேண்டியது மிகவும் அவசியம்; இல்லையென்றால், அந்தரங்கத்திற் கான புனிதத் தன்மை கெட்டு விடும்!

— கே.ரமாதேவி, தேனி.

இப்படியும் செய்யலாமே!

மருத்துவராக இருக்கும் நண்பர் வீட்டு திருமணத்தில், மண்டபத்தில் நுழையும் போதே, அனைவருக்கும் ஐஸ்கிரீம் கப் தரப்பட்டது. 'எல்லாரும், விருந்தின் கடைசியில் தானே ஐஸ்கிரீம் தருவர். நீங்கள் ஏன் முன்னாடியே தருகிறீர்கள்...' என்று, மருத்துவ நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர், 'உணவு உண்ட பின், ஜில்லென்ற ஐஸ்கிரீம் சாப்பிட்டால், உடலில் வெப்ப சக்தி குறைந்து, ஜீரண கோளாறு வரும். டாக்டராக இருக்கும் நானே, இந்த தவறை செய்யக் கூடாது...' என்றார். ஜீரண கோளாறை தவிர்க்க, விருந்துக்கு பின், ஐஸ்கிரீம் தருவதை தவிர்க்கலாமே!

— கோ.ருக்குமணி, கள்ளக்குறிச்சி.

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...

ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.

அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், 'ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.

பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

— ஐ.ஹரிணி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us