sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : டிச 14, 2014

Google News

PUBLISHED ON : டிச 14, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!

தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.

மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் விவசாயி வேடம் போட்டு, உழவுத் தொழிலை பற்றி பேசலாமே...' என்று கூறினேன். ஆனால், மாணவர்களோ, பெற்றோரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எல்லாரும் டாக்டர், இன்ஜினியர் என்று தான் யோசித்தனரே தவிர, விவசாயிகளை கவுரவிக்க, யாரும் முன்வரவில்லை. மாறாக, விவசாயி என்ற பெயரை கேட்டாலே, முகம் சுழித்தனர்.

ஒருவழியாக, ஒரு மாணவனிடம் பக்குவமாக பேசி, விவசாயி வேடம் போட வைத்து, 'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தலைப்பில் நானே எழுதிக் கொடுத்து, பேச வைத்தேன். அவனுக்கே முதல் பரிசும் கிடைத்தது.

இன்று, பெரிய பதவியில், பணச் செழுமையில் இருக்கும் எல்லாருக்கும் உணவிடுவது, வயலில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயி என்பதை உணர மறுப்பதேன்?

கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களுக்கும் தேவை. இனியாவது, நாட்டின் முதுகெலும்பான விவசாயியை பற்றி பெருமையாக பேச, எல்லா மாணவர்களும் தயங்காமல் உறுதி எடுத்துக் கொள்ள முன் வருவரா?

— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.

முழுமையான விருந்தோம்பல் இதுதான்!

சமீபத்தில், வயதான என் தாயாருடன், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பரின் மனைவி எங்களை வரவேற்று, குளிர்ந்த தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன், 'டீயா, காபியா...' என்றதுடன், 'ஸ்ட்ராங்கா, லைட்டா, சீனி கம்மியா, கூடுதலா...' எனக் கேட்டு, எங்கள் விருப்பப்படியே தயாரித்துக் கொடுத்தார். மேலும், 'மதியம் சாப்பிட்டுத்தான் போகணும்...' என்று வற்புறுத்தி, 'சைவமா, அசைவமா... என்னென்ன காய்கறிகள் பிடிக்கும்...' என்பதையெல்லாம் கேட்டு, உப்பு, காரம் அளவுகளையும் தெரிந்து கொண்டார்.

'இது என்ன புதுசா இருக்கு?' என, நண்பரிடம் கேட்டேன். 'நாம சின்ன வயசுல என்ன சாப்பிட்டாலும் உடனே ஜீரணமாயிடும்; ஆனா, வயசானவங்களுக்கு எது பிடிக்கும், எந்தெந்த உணவுகளை தவிர்க்கணும்ன்னு கேட்டு, அது மாதிரி செய்தால், உடல் நலம் சீராக இருப்பதுடன், தேவையற்ற உடல் உபாதைகளில் இருந்தும் தப்பிக்கலாம்...' என்றார்.

நண்பரின் ஐடியாவை நாமும் பின்பற்றலாமே!

— ஆர்.பகவதி சுப்புலட்சுமி,

பொட்டல்புதூர்.

வெளியே தெரிவது தான் பேஷன்!

கடந்த வாரம், இ.உ.இ., பகுதியில், இன்றைய இளைஞர்கள் அணியும் பேன்ட் குறித்து எழுதியிருந்தார் ஒரு வாசகி. ஆமாம்... தெரியாமல் தான் கேட்கிறேன்... லேடீஸ் நீங்கள் செய்யுறது மட்டும் உங்க கண்ணுக்குத் தெரியலயா?

முன்பெல்லாம் உள்ளாடைகள் வெளியே தெரிவதை அவமானமாக நினைத்த பெண்கள், 'இப்போ பிராவை வெளியே தெரியும்படி போடுவது தான் பேஷன்...' எனச் சொல்லி திரிவதும், லோ-ஹிப் ஜீன்ஸ் பேன்ட் போட்டு வயித்துக்கு மேலே பனியன் அணிந்து கவர்ச்சி காட்டுவதும், 'ஸ்லீவ்லெஸ்' என்ற பெயரில் அழுக்கு அக்குளையும் காட்டுறீங்களே... இதையெல்லாம் நாங்க சகிக்கலயா?

சரி அதவிடுங்க... புடவையையாவது ஒழுங்கா கட்டுறீங்களா...குட்டி குட்டியா மடிப்பு வைக்கிறேன்னு, பாதி உடம்பை காட்டும் உங்களுக்கும், கவர்ச்சி நடிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?

இப்படி எல்லாத்தையும் காட்டிட்டு இந்த அதிகாரி, 'செக்ஸ்' டார்ச்சர் கொடுத்தார், அந்த அமைச்சர் கையை பிடிச்சி இழுத்தார்ன்னு அழுவுறீங்களே... இது உங்களுக்கே நியாயமா இருக்கா?

முதல்ல கண்ணியமான உடைகளை நீங்க உடுத்துங்க; அப்புறம் எங்களுக்கு, 'அட்வைஸ்' செய்யுங்க!

— ரத்தக் கொதிப்புடன்,

யூத் பாய்ஸ் சங்கம்.






      Dinamalar
      Follow us