sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 22, 2015

Google News

PUBLISHED ON : நவ 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரிசுகளே... கேட்டுக்கங்க!

எங்கள் பக்கத்து வீட்டில், ஒரு இளம் தம்பதி குடியிருக்கின்றனர். அவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. அந்த பெண்ணின் மாமனார், சரியான சந்தேகப் பேர்வழி. அவளது கணவரைத் தேடி, அவரது நண்பர்கள், அவர் இல்லாத போது வந்தால், கணவர் வரும் வரை அவர்களை வரவேற்பறையில் அமரச் சொல்வாள். கணவரின் நெருங்கிய நண்பர்களாக இருந்தால், இரண்டொரு வார்த்தை பேசுவாள். இது, அப்பெண்ணின் மாமனாருக்கு பிடிப்பதில்லை.

சமீபத்தில் ஒருநாள், அப்பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த சமயம், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வரவே, அவரை வரவேற்று, காபி கொடுத்து, அவருடன் பேசியிருக்கிறாள். அவர்களையே வட்டமிட்டபடி இருந்த அவளது மாமனார், பேத்தியை அழைத்து, 'உன் அம்மாவும், அந்த மாமாவும் என்ன கூத்தடிக்கிறாங்கன்னு போய் பாத்துட்டு வா...' என்று கூறி அனுப்பியுள்ளார்.

அந்த சிறுமியும், தாத்தா கூறியதை தன் அம்மாவிடம் சத்தமாகக் கூற, இருவருக்கும் அதிர்ச்சி. வேதனையோடு உடனே கிளம்பி விட்டார் அந்த நண்பர்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள், பெருந்தன்மையாக இருந்து, குடும்பத்தை வழி நடத்தாமல், இப்படி குழப்பத்தையும், குழந்தைகள் மனதில் தவறான அபிப்ராயத்தையும் ஏற்படுத்தலாமா?

— நிர்மலா ராஜகோபால், விருதுநகர்.

நூலகம் வளர்ச்சியடைய...

பெண்கள் கல்லூரி ஒன்றில், பேராசிரியையாக பணிபுரிந்த என் உறவினர், சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு நடைபெறும், பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள, என்னையும் அழைத்திருந்தார். நானும், குடும்பத்தோடு அவ்விழாவில் கலந்து கொண்டேன்.

வாழ்த்துரை வழங்கியோர், கல்லூரியில் அவர் செய்த பணிகளையும், அவரின் குணநலன்களையும் புகழ்ந்து பேசி, அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

இறுதியில் ஏற்புரை ஏற்று பேசிய, உறவினர், 'எத்தனையோ ஏழ்மை நிலையில் தான், இக்கல்லூரியில் பணிக்குச் சேர்ந்தேன்; இன்று வாழ்க்கையில் எல்லா வசதிகளும், சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைத்துள்ளது. அதற்கு நன்றிக் கடனாகவும், என் மன ஆறுதலுக்காகவும், நம் கல்லூரியில் இயங்கும் நூலகத்தின் வளர்ச்சிக்காக, சிறு தொகையை நன்கொடையாக வழங்குகிறேன்; அதில் வரும் வட்டியைக் கொண்டு, ஆண்டுதோறும் மாணவியருக்கு பயன்படும் வகையில், நூலகத்திற்கு தேவையான புதிய நூல்களை வாங்க கேட்டுக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகள் இக்கல்லூரியில் பணிபுரிந்ததன் பயனாக, எனக்கு கிடைக்கும் ஓய்வு கால நிதியிலிருந்து, நூலக வளர்ச்சிக்கு நிதி அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது...' என்று கூறியதும், விழாவில் கலந்து கொண்ட அனைவரும் கைதட்டி, பாராட்டு தெரிவித்தனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோர், தங்களுடைய ஓய்வு கால நிதியிலிருந்து, ஒரு சிறிய தொகையை இவ்வாறு நன்கொடையாக அளித்து, அங்குள்ள நூலகங்களை வளர்ச்சியடைய செய்தால், மாணவ, மாணவியருக்கு பயன்படுமே... பள்ளி மற்றும் கல்லூரியில் பணிபுரிவோர் சிந்திப்பரா?

— தி.சுந்தரேசன், கோவை.

கணவன்மார்கள் கவனத்திற்கு...

நானும், என் தோழியும் அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறோம். கடந்த வாரம் அலுவலகம் முடிந்து, வீடு திரும்பும் போது, களைப்பாகவும், படபடப்பாகவும் இருப்பதாக கூறினாள் தோழி. 'பழச்சாறு வாங்கிக் குடித்தால் தெம்பாக இருக்கும்...' என்று நான் கூறியதும், அவசரமாக மறுத்து, பாட்டிலில் கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடித்து சமாளித்தாள்.

அரைமணி நேரத்தில், அவளுக்கு படபடப்பு அதிகமாகி மயங்கி விட்டாள். அவள் மயக்கத்தை தெளிவித்து, பழச்சாறு குடிக்க வைத்து, ஆட்டோவில் அனுப்பும் போது தான், அவள் கையில் பணம் இல்லாததை கவனித்தேன். பின், 100 ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.

மறுநாள், அவள் அலுவலகம் வந்த போது கூறிய தகவல், என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவளது கைச் செலவுக்கென, மாதம், 1,000 ரூபாய் மட்டுமே கொடுப்பாராம் அவளது கணவர்.

அதிலேயே தனக்குரிய செலவுகளை அவள் செய்து கொள்ள வேண்டும் என்பதால், டீ குடிப்பது, தன்னை தேடி வருவோருக்கு காபி வாங்கிக் கொடுப்பது, அவசர செலவுகள் என, 20ம் தேதியே அப்பணம் செலவாகி விட, இம்மாதிரி நேரங்களில் குளிர்பானம் வாங்கவோ, அவசரத்திற்கு ஆட்டோவில் செல்லவோ பணமின்றி தவித்திருக்கிறாள்.

மனைவியை வேலைக்கு அனுப்பி, குடும்ப பாரத்தை பகிர்ந்து கொள்ளும் ஆண்களே... வேலைக்குச் செல்லும் மனைவிக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம்; அவர்களுக்கு தாராளமாக, 'பாக்கெட்' மணி கொடுங்கள்; ஆபத்துக்கு உதவும்.

— தமிழரசி செல்வக்குமார், சென்னை.

கண்ணை பொன்னெனப் பாதுகாப்போம்!

சமீபத்தில், கண் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன். அங்கு, முதியவர் ஒருவர், கண் சிவந்த நிலையில், வலி தாளாமல், முனங்கிய படி அமர்ந்திருந்தார். விசாரித்த போது, பணி ஓய்வு பெற்ற அவர், தோட்ட வேலையில் ஈடுபட்ட போது, சிறு கல், கண்ணில் பட்டு விட்டதாக கூறினார். நல்லவேளையாக, சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், சொட்டு மருந்து மூலம் குணமாக்கி விடலாம் என்று மருத்துவர் கூறியதாக கூறினார்.

கண் பார்வை குறைபாடு, மிகுந்த சிரமத்தை தரும் என்பது கண்கூடு. ஆயினும், பலர் கண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அலட்சியமாக, பல பணிகளில் ஈடுபடுகின்றனர்; இதில் பல ஆபத்துகள் உள்ளன. உதாரணமாக, சமையல் செய்கையில், குறிப்பாக, தாளிக்கும் போது, கடுகு வெடித்து கண்ணில் பாயும் அபாயம் உள்ளது.

குளியலறையில், அமிலம் ஊற்றி சுத்தம் செய்யும் போது அமிலத் துளிகள் தெறித்து கண்ணில் விழலாம்; இது பார்வையை பாதிக்கும்; பறிக்கும் சக்தி கொண்டது. இருசக்கர வாகனத்திலோ, பஸ்சிலோ பயணிக்கும் போது, பூச்சிகள் பறந்து வந்து கண்ணை தாக்கி, சொல்ல முடியாத வலியையும், சேதத்தையும் உண்டாக்கும்.

வீட்டை சுத்தம் செய்கையில் தூசியும், ஒட்டடையும் கண்ணில் விழும் அபாயம் உள்ளது.

எனவே, எல்லாரும் மேற்கண்ட பணிகளில் ஈடுபடுகையில், மூக்கு கண்ணாடி அணிவது அவசியம். தங்கள் கண்ணின் பவருக்கு ஏற்றபடி, 'பவர் கிளாஸ்' அல்லது 'ப்.ௌயின் கிளாஸ்' அணிவது மிக நல்லது!

ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.






      Dinamalar
      Follow us