தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஆக 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் கொலை!

நான் தமிழறிஞனோ, தமிழ்ப் புலவனோ அல்ல. எல்லாரையும் போல, தமிழை, தாய் மொழியாகக் கொண்ட சாமானியன்; அவ்வளவுதான். ஆனால், அத்தமிழை யாராவது பிழையாக எழுதினாலோ, உச்சரித்தாலோ, 'சுரீர்' என்று கோபம் தலைக்கேறி விடுகிறது; ரத்தம் கொதிக்கத் துவங்கி விடுகிறது.

ரயில் நிலையங்களில், அறிவிப்பாளர்கள் வாயில் சிக்கி, தமிழ் படும்பாட்டை கேட்கப் பொறுக்கவில்லை. அவர்கள் அறிவிப்பு, 'சுக்கு, மிளகு, திப்பிலி' என்பதை, 'சுக்குமி, ளகுதி, ப்பிலி' என்று உச்சரிப்பது போலுள்ளது.

உதாரணமாக, 'சென்னை சென்ட்ரலிலிருந்து, கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து, 6:00 மணி, 18 நிமிடங்களுக்குப் புறப்படும்...' என்பதை, 'சென்னை, சென்ட்ரலில், இருந்து, கோவை, வரை, செல்லும், கோவை, எக்ஸ்பிரஸ், ஐந்தாவது, பிளாட்பாரத்தில், இருந்து, 6:00, மணி, 15, நிமிடங்களுக்கு, புறப்படும்...' என்று பிச்சு, பிச்சு உச்சரிப்பதைக் கேட்கும் போது, எரிச்சல் ஏற்படாமல், என்ன செய்யும்?

சென்னை சென்ட்ரலில் மட்டுமல்ல; எல்லா ஸ்டேஷன்களிலும் அறிவிப்பாளர்களால், தமிழ் இப்படிக் கடித்துக் குதறப்படுகிறது. இனிமேலாவது, ரயில்வே நிர்வாகம், தமிழ்க் கொலையை தடுக்க முன்வருமா?

— கே.சுந்தரம், சென்னை.

சமையலோ சமையல்!

என் வயது 55. சமையலில், நான் ஓரளவு எக்ஸ்பர்ட். சமீபகாலமாக தமிழ் சேனலோ, ஆங்கில சேனலோ எதைப் பார்த்தாலும், சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. அனைவரும் சப்புக் கொட்டி பார்க்கின்றனர்.

'டிவி'யில் அவர்கள் செய்து காட்டும் சமையல் வகைகள், இதய நோயாளிகளுக்கும், நீரழிவு நோயாளிகளுக்கும் ரொம்ப நல்லது. ஏனென்றால், அடுத்த வேளை மாத்திரை சாப்பிட நோயாளிகள் உயிரோடு இருக்க மாட்டார்கள். குடும்பத்துக்கு, பத்து வருட மருந்து செலவு மிச்சம்தானே!

சமையல் நிகழ்ச்சியில், நெய், வெண்ணெய், எண்ணெய், மளிகை பொருட்களை அள்ளி கொட்டுகின்றனர். அவர்கள் சொன்ன பாணியில் நாம் ஒரு வேளை சமையல் செய்து சாப்பிட்டால், நம் சொத்து முழுவதையும் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டும்.

ஆகவே, 'டிவி' சமையல் நிகழ்ச்சிகளை ஒரு கண்ணில் பார்த்து, மறுகண்ணில் விட்டு விடுங்கள். நாம், நம் பட்ஜெட்டுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்ற, 'டயட் பிரண்ட்லி' உணவுகளை தயாரித்து உட்கொள்வோம்!

— என்.மீனலோசனி, காரைக்குடி.

பெண்களே உடையில் கவனம் தேவை!

பெண்களே... நான் பஸ்சில் பயணம் செய்த போது, ஆண்கள் இருக்கையில், இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளின் சுடிதார், 'ஜிப்' வைத்து, மிகவும் இறுக்கமாக இருந்தது.

அவள், தன் தலையிலுள்ள பூவை எடுப்பது, வைப்பது, தலைமுடியை சரி செய்வதுமாக இருந்தாள். அவள் சுடிதாரில் உள்ள, 'ஜிப்' கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கி, உள்ளாடைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதை பார்த்த அனைவரும், முகம் சுளித்தனர்.

நான் இறங்கும் இடம் வந்ததும், அந்த பெண் என்ன நினைத்தாலும் சரி என்று, 'உங்கள் சுடிதாரின், 'ஜிப்' ஓப்பனாகி இருக்கிறது; சரி செய்து கொள்ளுங்கள்...' என்று சொல்லிவிட்டு, இறங் கினேன்.

பெண்களே... மானம் காப்பதற்குத்தான் உடை; மானம் போகும் அளவிற்கு, இம்மாதிரி உடைகள் அணிவது அவசியமா?

— வி.வாசுகி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us