தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனசே... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

என் தோழியின் அம்மா, இறைவனடி சேர்ந்து விட்டார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, நானும் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சி, என்னை வெகுவாக பாதித்தது.

என் தோழியின் மகனை, பள்ளிக்கு அனுப்பியிருந்தனர். பாட்டியின் இறுதி ஊர்வலத்தில் கூட, அந்தப் பேரன் கலந்து கொள்ளவில்லை; காரணம் என் தோழியின் கணவர்!

இப்போதெல்லாம், ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, பள்ளிகளில், சர்டிபிகேட் தருகின்றனர்; சில இடங்களில் பரிசு பொருட்களும் தருகின்றனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். அதே சமயத்தில், அது, எல்லா தருணங்களிலும் சரியாக வருமா என்பதை யோசிக்க வேண்டாமா?

என் தோழியின் கணவர், 'என் மகன் லீவு போடக் கூடாது; போட்டால், சர்டிபிகேட் கிடைக்காது...' என, பிடிவாதமாக இருந்தார். எத்தனையோ பேர் சேர்ந்து, எவ்வளவோ அறிவுரை சொல்லியும், அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இப்பூமியில், தன் தாயின் கடைசி நிமிடங்களில், தன் மகன் உடன் இல்லையே என்று எண்ணி, என் தோழி மிகவும் மனம் வருந்தி அழுதாள்.

ஒரு மனிதனின் மரணத்தைப் பார்க்கும் மனம், நிச்சயம் பாதிப்படையும். நாளை தனக்கு இந்த நிலை வரும் என்ற வாழ்வியல் உண்மையை உணர்த்தும்; மனசாட்சியை கொஞ்சமாவது உலுக்கும்.

அதனால் தான், நம் முன்னோர் இறப்பு செய்தி கேள்விப்பட்டால், 'அழையாத விரோதி வீட்டிற்கு கூட செல்ல வேண்டும்...' என்று சொல்லியுள்ளனர்.

பிடிவாத கணவர்மார்களே... யோசியுங்கள்!

இம்முறை இல்லாவிட்டால், அடுத்த வருடம் சர்டிபிகேட் வாங்க முடியும்; ஆனால், இறுதிச் சடங்கு மீண்டும் நடக்குமா; பங்கேற்கத்தான் முடியுமா?

மேலும், பள்ளி நிர்வாகமும், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க விடுமுறை அளிக்கலாம். அந்த விடுமுறை நாளை கணக்கில் கொள்ளாமல், அம்மாணவனுக்கு சர்டிபிகேட் தந்து கவுரவிக்கலாம்.

மனசாட்சி உள்ளவர்கள், மூளையை தவிர்த்து, இதயத்திடம் பேசி, முடிவை எடுக்கலாமே!

— எம்.எஸ்.நசரத் நவாஸ், நெய்வேலி.

சபாஷ் போட வைத்த ஐடியா!

என் தோழிக்கு வரன் பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவள் எனக்குக் கொடுத்த திருமண அழைப்பிதழை வியப்பாகப் பார்த்தேன்.

முகூர்த்த நாளுக்கு முன் தினம், மாலை, 3:30 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் என்றும், மாலை, 6:30 மணி முதல், மணவிழா வரவேற்பு என்றும் அழைப்பிதழில் குறிப் பிடப்பட்டிருந்தது.

'என்னடி... பத்திரிகை வரை அடிச்சிட்டீங்க... இன்னும் கல்யாணம் நிச்சயம் பண்ண லையா?' என, வியப்புடன் கேட்டேன்.

'சும்மா தட்டு மாற்றி, திருமண உறுதி செய்து கொண் டோம்; ஆனால், முறைப் படியான நிச்சயதார்த்த சடங் குகள் ஏதும் செய்யவில்லை. எனக்கு, அம்மா வழியில் மாமன், மச்சான் அதிகம். ஒவ் வொருவரும் ஒவ்வொரு ஊரில் உள்ளனர். அவரவருக்கு, ஆயிரம் வேலைகள். இதில், நிச் சயத்துக்கு ஒருமுறை, முகூர்த் தத்துக்கு ஒருமுறை அவர்கள் வந்து செல்வது சிரமம் மற்றும் வீண் செலவு. தவிர, அவர் களது தொழில், வியாபாரம், வேலை ஆகியவையும் பாதிப்படையும்.

இதையெல்லாம் தவிர்க்கத் தான் திருமண நாளுக்கு முன்தினம் இந்த நிச்சயதார்த்த சடங்குகளை அப்பா ஏற்பாடு செய்துள்ளார். அலைச்சல், வீண் செலவு எதுவும் இல்லை...' என்றொரு நீண்ட விளக்கம் தந்தாள் தோழி.

அவளது மாமன், மச்சான் களுக்கு மட்டுமல்ல, அவளது அப்பாவுக்கும் இரட்டை செலவு குறைந்து விட்டதை கவனித்து, 'சபாஷ்' போட்டேன்.

— ஜே.ரூபி ஏஞ்சலின், மதுரை.

அதிபுத்திசாலி சுட்டிகள்!

இந்த காலத்து குழந்தைகள், படு சுட்டிகள் மட்டுமல்ல; அதிபுத்திசாலிகளும் கூட. அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஆசிரியர்கள் இருந்தால் சரி. இல்லாவிட்டால், அவர்கள் கதி, 'அதோகதிதான்!'

இரண்டாம் வகுப்பு படிக்கும் எங்கள் வீட்டுக் குட்டியை, பள்ளிக்குக் கிளப்புவதற்காக, காலைக் கடனை முடிக்கச் சொன்னோம். அவனோ, 'எனக்கு வரவில்லை; நான் போக மாட்டேன்...' என்று, அடம் பிடித்தான்.

அடிக்காத குறையாக விரட்ட, சிறிது நேரம் கழித்து, டாய்லெட்டில் இருந்தபடியே, 'மேடம் சொன்னது சரிதான்...' என்றான். 'அப்படி என்ன மேடம் சொன்னார்கள்?' என்று கேட்டதற்கு, 'முயற்சி திருவினையாக்கும்...' என்று, முந்தைய நாள், ஆசிரியர் பாடம் நடத்தியதை மழலை மொழியில் சொல்ல, 'காலைக் கடனுக்கா அதைச் சொன்னார்கள்?' என்று, வீட்டிலிருந்த அனைவரும், 'கொல்லென' சிரித்தாலும், ஆறு வயது சுட்டியின், ஒப்பீட்டுத் திறனைக் கண்டு வியந்தோம்.

அதேபோல், இரண்டாம் வகுப்பு முதல் இடைத்தேர்வில், ஏழாவது ரேங்க் எடுத்தவன், தொடர்ந்து வந்த காலாண்டுத் தேர்வில், ஒன்பதாவது ரேங்க் எடுத்தான். அடுத்து வந்த நாட்களில் உடல் நிலை சரியில்லாமல், லீவு அதிகம் போட்டதால், இரண்டாவது இடைத்தேர்வில், 14வது ரேங்க் எடுத்து, பின்தங்கிப் போனான்.

'அடுத்த முறை, நன்றாகப் படித்து, முன்செல்ல வேண்டும்...' என்று கூறியதற்கு, 'அட போங்கப்பா... நான் ஏழாவது ரேங்க் எடுத்த போதும், ரிப்போர்ட் கார்டில், 'குட்' தான் போட்டாங்க. ஒன்பதாவது ரேங்க் எடுத்த போதும் அதத்தான் செஞ்சாங்க. இப்போ, 14வது ரேங்க் எடுத்ததற்கும் அதே தான்... அப்போ எதுக்கு இன்னும் நல்லா படிக்கணும்... இது போதாதா?' என்று கேட்க, இப்படி, எல்லாவற்றிற்கும், 'குட்' போட்ட, ஆசிரியரை குறை கூறுவதா, இல்லை இவனது புத்திசாலித்தனத்தை பாராட்டு வதா என்று தெரியாமல், வாயடைத்துப் போனோம்.

— ஆர்.அஞ்சலை, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us