தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திப்பிலி!

திப்பிலி!

திப்பிலி!


PUBLISHED ON : ஏப் 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, திப்பிலி. மேலும், இதில் தயாரிக்கப்படும் மருந்து, ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்தது.

உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப்போக்கு, தொழு நோய், முக்கியமாக, இருமல், கபம், சுவாசக்குழாய் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

திப்பிலி பொடி மற்றும் கடுக்காய் பொடி சம அளவு எடுத்து, தேன் விட்டு குழைத்து, அரை தேக்கரண்டி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் நீங்கும்.

உடல் வலி, முதுகு வலி மற்றும் வாத நோய்களுக்கு, கண்டந்திப்பிலி, 5 கிராம் எடுத்து அரைத்து, பாலில் கலந்து குடிக்க வேண்டும்.

திப்பிலி பொடி, 10 கிராம் எடுத்து, அரை மி.லி., பசும்பால் விட்டு காய்ச்சி, இருவேளை குடித்து வர, இருமல் மற்றும் வாயுப் பிரச்னைகள் குணமாகும்.

துாள் செய்த அரை தேக்கரண்டி திப்பிலியில் தேன் கலந்து, இரு வேளையாக, ஒரு மாதம் சாப்பிட்டு வர, தேமல் குணமாகும்.

மூட்டு வலிக்கு, 2 கிராம் திப்பிலி பொடியை, 100 மி.லி., பாலில் கலந்து, 30 நாட்கள் தினமும் பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.

திப்பிலி, மிளகு, தோல் நீக்கிய சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து, வறுத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வர, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டை கமறல் குணமாகும்.

— ஏ.ராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us