PUBLISHED ON : ஏப் 17, 2022

அ நிறம் | அளவு
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த, தரமான சாம்பிராணி, அரபு நாடுகளில் ஒன்றான, ஓமனில், சலாலா மலைப்பகுதியில் வளரும் போஸ்வெலியா என்ற மரத்தில் இருந்து கிடைக்கிறது.
ரப்பர் மர பாலை சேகரிப்பது போல், போஸ்வெலியா மரத்தின் பட்டையை சீவி, வடியும் பாலை சேகரிக்கின்றனர். அதிலிருந்து சாம்பிராணி தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த மரங்களை காணவும், அதிலிருந்து தயாரிக்கும் சாம்பிராணியை வாங்கவும், பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
— ஜோல்னாபையன்
