PUBLISHED ON : நவ 05, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால் பாதங்களின் சுகாதாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர், ஜப்பானியர். இதனாலேயே, ஒருவரது பாதம், எந்த அளவுக்கு சுகாதாரமாக உள்ளது என்பதை கண்டுபிடிக்க, 'ரோபோ' வடிவிலான, நாயைக் கண்டுபிடித்துள்ளது, ஒரு ஜப்பானிய நிறுவனம்.
இந்த நாய், ஒருவரது பாதம் அல்லது அவர் பயன்படுத்திய, 'சாக்ஸ்' ஆகியவற்றை நுகர்ந்து அதில் நல்ல வாசனை வந்தால், வாலை ஆட்டும்; மோசமான வாசனை வந்தால், குரைப்பதுடன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விடும்.
இதை வைத்து, யாருடைய கால் பாதம், சுகாதாரமாக உள்ளது; யார் பாதம், சுகாதாரமற்ற நிலையில் உள்ளது என்பதை கண்டுபிடிக்கின்றனர்!
—ஜோல்னாபையன்.

