
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தற்சமயம், மனநிலை பாதிக்கப்பட்டு, கேரளாவில் உள்ள தலசேரி ரயில் நிலையத்துக்கு அருகில், ஒரு கடை திண்ணையில் காலத்தை ஓட்டுபவர், பிரியதர்ஷினி டீச்சர். பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய இவரை, 'பைத்திய டீச்சர்' என்றே அழைக்கின்றனர்.
இவர், இளமையில், திருவனந்தபுரம் - மங்களூரூ வரை செல்லும் ரயில் ஓட்டுனரை காதலித்தார். தலசேரிக்கு ரயில் வரும்போதெல்லாம், அவரை சந்திக்க, ரயில் நிலையத்துக்கு ஓடி வருவார், பிரியதர்ஷினி. இந்நிலையில், விபத்து ஒன்றில் காதலன் பலியாக, அதை தாங்க முடியாமல், பைத்தியமானார், பிரியதர்ஷினி. அன்றிலிருந்து, தினமும் காலையில், ரயில் நிலையம் வந்து, காதலனை தேடுவார்; இன்று வரை தேடிக் கொண்டிருக்கிறார். இவரது கதையை, மலையாளத்தில் சினிமாவாக எடுத்தனர்; படம் சக்கைப்போடு போட்டுள்ளது.
— ஜோல்னாபையன்.

