PUBLISHED ON : நவ 05, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டை பெருமைப்படுத்தும் வரலாற்று சின்னங்களில் தங்கள் பெயரை கிறுக்குவது சிலருக்கு வழக்கம். அத்தகைய, வரலாற்று சின்னமான சார்மினாரில், தன் பெயரை கிறுக்கியபோது, காவலாளிகளிடம் அகப்பட்டுக் கொண்டான், இந்த வாலிபன். 'இது பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...' என்று கூறி, தோப்புக்கரணம் போடச் சொல்லி தண்டனை கொடுத்து விட்டனர். இந்த தண்டனையை பார்த்தாவது, மற்ற கிறுக்கன்களுக்கு புத்தி வர வேண்டும்!
— ஜோல்னா பையன்.

