தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டை பாதுகாக்க...

வீட்டை பாதுகாக்க...

வீட்டை பாதுகாக்க...


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டு வேலைக்கு நன்கு தெரிந்தவர்களையும், நண்பர்களால் பரிந்துரைக்கப் பட்டவர்களையும் மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் குடியிருக்கும் இடம், அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருப்பது அவசியம்

* புதிதாக வீடு கட்டுபவர்கள், வீட்டு கதவில், 'டோர் லென்ஸ்' பதிக்க வேண்டும். பெண்கள் வீட்டுக்குள் இருந்தபடியே வெளியே யார் வந்திருக்கின்றனர் என்பதை கண்டறிய இது உதவும்

* இரவு நேரத்தில், படுக்கை அறையில் எட்டும் துாரத்தில் எமர்ஜென்சி லைட், மெழுகு வர்த்தியுடன் தீப்பெட்டியும் வைத்திருப்பது நல்லது. அதேபோல், படுக்கையறையில், 'மாஸ்டர் சுவிட்ச்' பொருத்துவது சிறந்தது. இரவில் ஏதாவது சந்தேகம் வந்து படுக்கையறையில் இருக்கும் சுவிட்சை போட்டால் வீட்டிலிருக்கும் அத்தனை விளக்குகளும், 'ஆன்' ஆகும்

* வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது, அறிமுகமில்லாத நபர்கள் வேலை கேட்டு வந்தால் அல்லது ஏதாவது பொருட்கள் விற்க வந்தால், அவர்களை பற்றிய முழு விவரம் தெரியாமல் ஒருபோதும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். அது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போன்ற செயலாகிவிடும், ஜாக்கிரதை

* கணக்கெடுப்பாளர், வாட்டர் மீட்டரை சரி பார்க்க வந்தவர் என சொல்லி, யார் வந்தாலும், அவர்களின் அடையாள அட்டை காண்பிக்க சொல்லுங்கள். அதை பார்த்து ஊர்ஜிதப்படுத்திய பிறகு வேலை செய்ய அனுமதியுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us