தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/'டூர் டிப்ஸ்!'

'டூர் டிப்ஸ்!'

'டூர் டிப்ஸ்!'


PUBLISHED ON : ஏப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'டூர்' செல்லும் முன், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

வெளியூர் போகும்போது, ஆவியில் வெந்த உணவு வகைகளை சாப்பிடுவதே ஆரோக்கியமானது

* 'டூர்' செல்வதற்கு முன், வீட்டில் உள்ள எல்லாருக்கும், 'மெடிக்கல் செக் - அப்' செய்து, ரத்த அழுத்தம், சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா என, உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்

* வெளிநாடு, 'டூர்' கிளம்புவதற்கு முன், பாஸ்போர்ட், விசா, வெளிநாட்டு கரன்சி, என, எல்லாத்தையும் மறக்காமல் எடுத்து கொள்ளவும்

* 'டூர்' போகும் முன், மளிகை முதல், காய்கறி வரை, சிக்கனமாக வாங்கி செலவழித்துவிட்டு கிளம்புங்கள். திருடர்கள், வீட்டில் சமைத்து சாப்பிட்டு, திருடிட்டு போற மாதிரி வைக்காதீங்க

* குடும்பத்தோடு, 'டூர்' போவதாக இருந்தால், கண்டிப்பாக நமக்கு நம்பிக்கையான உறவினர்களை வீட்டில் இருக்கச் செய்ய வேண்டும்

* எத்தனை நாட்கள், எங்கு, எவ்வளவு பேர், எதில் போகப் போகிறோம் என்பதை பொறுத்து, பணம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., கார்டு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்; அவற்றின் பின் நம்பர்களை மொபைல் போனில் ஸ்டோர் செய்யாமல், ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளவும்

* போகும் இடம் குளிர் பிரதேசமாக இருந்தால், 'ஸ்வெட்டர், ஷால், குல்லாய்' போன்ற கம்பளி ஆடைகளை எடுத்துச் சென்றால், அவஸ்தைப்படாமல் தப்பிக்கலாம்

* காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அசவுகரியங்கள் ஏற்பட்டால், சமாளிப்பதற்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் முதலுதவி பெட்டி எடுத்துச் செல்வது அவசியம்

* பெண்கள், நாப்கின்களையும்; ஆண்கள், ஷேவிங் செட்டையும், ஞாபகமாக எடுத்துச் செல்லுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us