
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் நுாற்றுக்கணக்கான பட்டறைகள், கர்நாடக மாநிலம், மைசூரு-- - பெங்களூரு நெடுஞ்சாலையில் இருக்கின்றன.
சீனாவில் இருந்து வரும் விலை குறைந்த பொம்மைகளில் பூசப்பட்டுள்ள வண்ணங்கள், குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. ஆனால், இங்கு தயாராகும் பொம்மைகள் முழுக்க முழுக்க மரத்தால் தயாரிக்கப்படுபவை. குழந்தைகளை எவ்விதத்திலும் இந்த பொம்மைகள் பாதிக்காது.
இதில் பூசப்படுபவை அனைத்தும், காய்கறிகளில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை வண்ணங்கள். இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் விருப்பத்தை சொன்னால், அதற்கு ஏற்ற வடிவில் பொம்மை செய்து கொடுப்பர். இங்கிருந்து நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் பல நாடுகளுக்கும் பொம்மைகள் அனுப்பப்படுகின்றன.
— ஜோல்னாபையன்

