PUBLISHED ON : ஏப் 16, 2017
அ நிறம் | அளவு
நம்ம ஊர் கவுன்சிலர்கள் கூட, அரசியல்வாதி என்ற பந்தாவுடன் இருக்கும் போது, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, இருமுறை கேரள முதல்வராக இருந்த போதும், பந்தா இல்லாமல் இருக்கிறார். தற்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அவர் வீட்டில், எப்போதும் கூட்டம் இருப்பதால், சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை; மனைவி சாப்பிடச் சொல்லி, தொல்லைப்படுத்தும் போது, சமையலறைக்கு சென்று, நின்றபடியே சாப்பிடுகிறார்.
மேலும், முடி நீளமாக வளர்ந்து முகத்தை மறைக்கும் போது தான், முடிவெட்ட வேண்டும் என்ற எண்ணமே இவருக்கு வருகிறது. அப்போதும், முடிவெட்ட நேரமில்லை என்றால், மனைவியை கூப்பிட்டு, 'கொஞ்சம் முடியை வெட்டி விடு...' என்கிறார். அவர் மனைவியும் முடியை வெட்டி விடுகிறார்.
— ஜோல்னாபையன்.
