PUBLISHED ON : அக் 02, 2016

அ நிறம் | அளவு
திருநெல்வேலி, சாலைக்குமரன் கோவிலருகே, கடந்த, 75 ஆண்டுகளாக, இயங்கி வருகிறது, சந்திரவிலாஸ் ஓட்டல்.
இந்த ஓட்டலில், ரவிவர்மா வரைந்த, பாரதமாதா படத்தின் கீழ் நிற்கும், ஓட்டல் முதலாளியின் பெயர், உ.வே.சாமிநாத அய்யர்!
ஆச்சரியமாக இருக்கிறதா?
தமிழ்த்தாத்தா, உ.வே.சா., பிறந்த அதே நாள், நட்சத்திரம் மற்றும் கிழமையில் பிறந்தவர் இவர்; ஆண்டு தான் வேறு!
ஒட்டல் அதிபரின் பேரன், ஒவ்வொரு ஆண்டும், தமிழ்த்தாத்தா பிறந்தநாளன்று, சென்னைக்கு வந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, 400 பேருக்கு அன்னதானம் செய்கிறார்.
அத்துடன், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் திருநெல்வேலியில் கொடி ஏற்றி, அன்னதானம் செய்கிறார்.
—ஜோல்னாபையன்
