தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நவராத்திரி சுண்டல்!

நவராத்திரி சுண்டல்!

நவராத்திரி சுண்டல்!


PUBLISHED ON : அக் 02, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பச்சைப்பயறு மற்றும் காராமணி சுண்டல்களுக்கு, வெல்லம் மற்றும் தேங்காய்த் துருவலும், கொண்டைக் கடலைக்கு காரப்பொடியும் சேர்த்தால், அலாதியான ருசி இருக்கும்.

* சுண்டல் வகைகளை வேக வைக்கும் போது, உப்பு சேர்த்தால், 'நறுக் நறுக்' என்று இருக்கும். இதற்கு, சுண்டலை அடுப்பில் இருந்து, கீழே இறக்குவதற்கு முன், தூள் உப்பை போட்டு, நன்றாக கிளறி இறக்குங்கள். சுண்டல், 'மெத் மெத்'தென்று இருக்கும்.

* வெந்த சோயா பீன்சுடன், வதக்கிய குடை மிளகாய் மற்றும் துருவிய, 'சீஸ்' சேர்த்தால், குழந்தைகளுக்கு பிடித்த சுண்டல் தயார்!

* வேக வைத்து, உதிர்த்த மக்காச் சோளத்தில், சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்தால், வித்தியாசமான சுண்டல் ரெடி!

* எந்த வகை சுண்டல் செய்தாலும், மேல் தோல் வெடிக்கும் வரை வெந்திருந்தால், சாப்பிடுவோருக்கு அஜீரணம் வராது.

* சங்கு மக்ரோணியை வேக வைத்து தாளித்து, வறுத்த எள் பொடியை தூவினால், மாடர்ன் சுண்டல் தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us