
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாய்லாந்தில் வசிக்கும், 'காறென்' இன மக்கள், முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். 18வது நுாற்றாண்டில், பர்மாவில் இருந்து தாய்லாந்தில் குடியேறிய இவர்கள், இன்னும் பழமையான பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர்.
கழுத்தில் பித்தளை வளையங்கள் அணிவது அழகாக காட்டுவதாக நம்புகின்றனர், பெண்கள். இதனால், சிறு வயதில் இருந்தே கழுத்தில் வளையங்கள் அணிய துவங்குகின்றனர். முதலில், ஐந்து வளையங்கள் போடுவர். வயது ஏற, வளையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவர்கள், 25 வளையங்கள் வரை அணிவதுண்டு.
'இந்த பழக்கத்தால், பெண்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கழுத்து எலும்பு, முதுகு எலும்பு என, உடலின் பல பாகங்களில் சேதம் ஏற்படுகிறது. வருங்காலங்களில் இந்த பழக்கம் மாறலாம்...' என்கின்றனர், மருத்துவர்கள்.
—ஜோல்னாபையன்