sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அமெரிக்க அதிபர்கள்- சில சுவாரஸ்யமான தகவல்கள்!

/

அமெரிக்க அதிபர்கள்- சில சுவாரஸ்யமான தகவல்கள்!

அமெரிக்க அதிபர்கள்- சில சுவாரஸ்யமான தகவல்கள்!

அமெரிக்க அதிபர்கள்- சில சுவாரஸ்யமான தகவல்கள்!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் நடைபெறும். அந்நாட்டின், முதல் அதிபராக ஜார்ஜ் வாஷிங்டன் பொறுப்பு ஏற்றார். இதுவரை, 45 பேர் அதிபராக இருந்துள்ளனர்.

இதில், ஒன்பதாவது அதிபராக, குறைந்தபட்சம், 31 நாட்கள் மட்டுமே இருந்தவர், வில்லியம் ஹென்றி ஹாரிசன்; அதிகபட்சம், 12 ஆண்டுகள் மற்றும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக பதவி வகித்தவர், 32வது அதிபராக இருந்த, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

* கடந்த, 1789ல், முதல் அமெரிக்க அதிபர் ஆனவர், ஜார்ஜ் வாஷிங்டன். 100 சதவீதம் ஓட்டுகள் பெற்ற ஒரே அதிபர். அவரின் பிறந்த நாள், அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகிறது.

இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்துள்ளார், வாஷிங்டன். ஆனால், பதவி காலத்தில் அவர், யாருடனும் கை குலுக்கியது இல்லை.

* அமெரிக்காவின் முதல் துணை அதிபர் என்ற பெருமையும், இரண்டாவது அதிபரும் ஆனவர், ஜான் ஆடம்ஸ். அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் முதன்முதலில் குடியேறியவர். இவரது மகன், குவின்சி ஆடம்ஸ், அமெரிக்காவின் ஆறாவது அதிபர். மெஜாரிட்டி கிடைக்காமல், 'ஹவுஸ் ஆப் ரெபரசன்டேடிவ்' உறுப்பினர்கள், முதல், மூன்று இடங்களில் வந்தவர்களில் ஒருவரை தேர்வு செய்வர். அப்படி அதிபரானவர் இவர் மட்டும் தான்.

* அமெரிக்காவின் மூன்றாவது அதிபர், தாமஸ் ஜெபர்சன். எழுத்தாளர், கட்டடவியல் நிபுணர், கண்டுபிடிப்பாளர் என, பன்முகம் கொண்டவர். அவர், தன் இறப்புக்கு முன், 1826-ல், தனக்கான கல்லறை மற்றும் கல்வெட்டை உருவாக்கினார். அதில், அமெரிக்க அதிபர் என குறிப்பிடுவதை தவிர்த்தார்.

*'அமெரிக்க உரிமைகள் சட்டத்தின் தந்தை' என, போற்றப்படும் ஜேம்ஸ் மாடிசன், நான்காவது அதிபர். அதிபர்களில் உயரம் குறைந்தவர். இவரின் உயரம், 5 அடி 4 அங்குலம்.

* அமெரிக்க அதிபர்களில் உயரமானவர், 16-வதாக பொறுப்பேற்ற ஆபிரகாம் லிங்கன். இவரின் உயரம், 6 அடி 4 அங்குலம். தாடி வைத்த முதல் அதிபரும் லிங்கன் தான். இவர் காலத்தில் தான், பதவியேற்பு விழா, முதன்முதலில் புகைப்படமாக எடுக்கப்பட்டது.

* அமெரிக்க சுதந்திர புரட்சி நடந்து கொண்டிருந்த நேரம். 13 வயது சிறுவன், பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின், ஷூவுக்கு பாலீஷ் போட மறுத்து விட்டான் என, சிறையில் அடைக்கப்பட்டான். அந்த சிறுவன் தான் பின்னாளில் அமெரிக்காவின், ஏழா-வது அதிபரான, ஆண்ட்ரு ஜாக்சன்.

* அமெரிக்காவின், 10-வது அதிபராக வலம் வந்தவர், ஜான் டைலர். அதிபர்களில் அதிக குழந்தைகளை பெற்றவர், இவர் தான்; இருமுறை திருமணம் செய்தவர். முதல் மனைவிக்கு, 8 குழந்தைகள், இரண்டாவது மனைவிக்கு, 7 குழந்தைகள்.

* அமெரிக்க அதிபர்களில் திருமணமே செய்து கொள்ளாதவர், ஜேம்ஸ் பக்மன். 15-வது அதிபராக இவர் இருக்கும் போது, தன் சொந்த செலவில் அடிமைகளை விலைக்கு வாங்கி, அவர்களை விடுதலை செய்து வந்தார். அதில் அலாதி பிரியம் கொண்டவர்.

* அமெரிக்காவின், 20-வது அதிபராகி, ஆறு மாதங்களில் சுடப்பட்டு இறந்தவர், ஜேம்ஸ் கார்பீல்டு. ஒரே சமயத்தில், வலது கையால் லத்தீன் மொழி, இடது கையால் கிரேக்க மொழி என, இரு வேறு மொழிகளில் எழுதி அசத்தியவர்.

* அமெரிக்காவின், 22 மற்றும் 24வது அதிபர், குரோவர் கிளீவ்லாண்டு. வெள்ளை மாளிகையில் திருமணம் செய்து கொண்ட முதல் மற்றும் ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமைக்குரியவர்.

* இளம் வயதில், தன், 41 வயதில், 26வது அதிபரானவர், தியோடர் ரூஸ்வெல்ட்; அதிக வயதில், அதாவது, 78வது வயதில் அதிபரானவர், ஜோபைடன்.

* அமெரிக்காவின், 27வது அதிபர், வில்லியம் ஹோவர்ட் டாப்ட். அதிபராகவும், அந்நாட்டின் பிரதான நீதிபதியாகவும் பணியாற்றியவர். அதிபர் பதவி காலத்திற்கு பின், 10-வது தலைமை நீதிபதியாக, 10 ஆண்டுகள் பணியாற்றி பெருமை சேர்த்தவர்.

* அமெரிக்காவின், 28-வது அதிபர், உட்ரோ வில்சன். இயற்பியல் துறை காந்த அலைகள் மேம்பாட்டு ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றதுடன், உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அதிபர்.

* அமெரிக்காவின், 34-வது அதிபர், டுவைட் ஐசனோவர். அமெரிக்க அதிபர்களில் இவர் மட்டுமே, ஒரு நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை ரசித்து பார்த்தவர். ஆஸ்திரேலியா - -பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியை, பார்த்து ரசித்தார். இவர், அதிபராவதற்கு முன், இரண்டாவது உலகப்போர் சமயத்தில், 1,000 கோடி சொத்து மதிப்புள்ள புதையலை கண்டுபிடித்து அரசுக்கு கொடுத்து அசத்தினார்.

* அமெரிக்காவின், 35வது  அதிபராக மிக இளம் வயதிலேயே பதவி ஏற்றவர், ஜான்.எப்.கென்னடி. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, கடற்படையில் பணிப்புரிந்தவர்.

* அமெரிக்காவின், 36-வது அதிபராக, விமானத்தில் பறந்த படியே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர், லிண்டன் பி ஜான்சன்.

* எந்த தேர்தலிலும் போட்டியிட்டு ஜெயிக்காமல், நேரடியாக அமெரிக்காவின், 38-வது அதிபரானவர், ஜெரால்டு போர்டு. நீண்டகாலம் உயிர் வாழ்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. தன், 93 வயது வரை உயிர் வாழ்ந்தார்.

* நர்சிங் ஹோமில் பிறந்த ஒரே அமெரிக்க அதிபர், 39-வது அதிபரான, ஜிம்மி கார்ட்டர்.

* அமெரிக்காவின், 44-வது அதிபர், பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர்களில் இசைக்காக வழங்கப்படும், 'கிராமி' அவார்டு பெற்றவர். 2006ல், 'டிரிம்ஸ் பிரம் மை பாதர்' எனும் ஆடியோவிற்காக இது வழங்கப்பட்டது.

கோவீ. ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us