sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 04, 2024

Google News

PUBLISHED ON : ஆக 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 34 வயது பெண். கணவர், சொந்தமாக சிறு தொழில் செய்கிறார். எங்களுக்கு ஒரே மகள். வயது; 15. சொந்த வீடு, கார் என்று ஓரளவு வசதியாக இருக்கிறோம்.

சிறு வயது முதலே மகளை, எங்கும் தனியாக அனுப்ப மாட்டேன். பக்கத்து வீடு, என் அம்மா வீடு என்று, எங்கு சென்றாலும் நானும் உடன் செல்வேன். பள்ளியில் சேர்த்த பின்னரும், தினமும் நானே அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, திரும்பவும் கூட்டி வருவேன்.

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் தொல்லையை தினமும் படித்துள்ளேன். மேலும், என் தோழி ஒருவரின் மகளுக்கு, அவர்கள் வீட்டு கார் டிரைவரால் நடந்த, 'சைல்ட் அப்யூஸ்' பற்றி கேள்விப்பட்டேன். அதிலிருந்து, அவளை தனியாக எங்கும் அனுப்புவதில்லை என்று முடிவு செய்தேன்.

இவ்வளவு கெடுபிடி காட்ட வேண்டாம் என்று தான் கூறுகிறார், கணவர். ஆனால், எனக்கு தான், யாராவது என் குழந்தையிடம் தவறாக நடந்து விடுவாரோ என்று பயம் உள்ளது.

'டீன் - ஏஜ்' பருவத்தில் இருக்கும் அவள் மீது கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறேன். ஆனால், இது என் மகளுக்கு பிடிக்காமல், சண்டை போடுகிறாள்.

இந்த ஒரு விஷயம் தவிர, மற்றவற்றில் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ள அனுமதிக்கிறேன். அவளது ஆசை எதுவானாலும், உடனடியாக நிறைவேற்றி விடுவேன்.

வீட்டில், தன் தோழியருடன் பாட்டு, நடனம் என, சர்வ சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறேன்.

இப்போதெல்லாம், எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்வாகவே காணப்படுகிறாள், மகள். அவளிடம் பேசி பார்த்ததில், 'என்னுடன், 'பாடி கார்டு' போல் வருவதை நிறுத்தினால் தான் உன்னுடன் பேசுவேன்...' என்று, பிடிவாதமாக இருக்கிறாள்.

'சற்று விட்டுப் பிடிக்கலாம்...' என்கிறார், கணவர். என் மனது தான் கேட்க மாட்டேன்கிறது. என் மகளின் நலனுக்காகதான் இப்படி செய்கிறேன் என்று, எப்படி அவளுக்கு புரிய வைப்பேன்.

நல்ல ஆலோசனை கூறுங்கள், அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்பு மகளுக்கு —

'டீன் - ஏஜ்' மகளை சமாளிப்பது, 200 கி.மீ., வேக புயலை சமாளிப்பதற்கு சமம். 'டீன் - ஏஜ்' பெண்கள், முழுமையாக பக்குவப்பட, 20 வயதாகும். 'டீன் - ஏஜ்' மகளை வளர்ப்பதற்கும், அதே வயதுள்ள மகனை வளர்ப்பதற்கும், ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

'டீன் - ஏஜ்' பெண்களுக்கு பார்க்கும் எல்லா வயது ஆண்களும் ஈர்ப்பர். அவர்களுக்கு, தாய் பரம எதிரி ஆவாள்.

'டீன் - ஏஜ்' பெண்களுக்கு, தான் சுதந்திரமானவள் என்ற எண்ணம் சதிராடும். சில துாண்டல்களுக்கும், உணர்வுகளுக்கும் இரையாவர்.

இந்த வயது பெண்களின் மன நிலை நொடிக்கு நொடி தாவிக் கொண்டே இருக்கும். ஒரு கணத்தில், மகிழ்ச்சியின் உச்சத்திலும், இன்னொரு கணத்தில், சோகத்தின் உச்சியிலும் கொடி நாட்டுவர். அறிவுரை அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும், ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள் என்கிறது, புள்ளி விபரம். அதன்படி, உன் பயம் நியாயமானது.

இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்:

மகளின் மீதான கண்காணிப்பு வளையம், அவளுக்கு அறவே தெரியக் கூடாது. மகள் முன் காவல்துறை சீருடை அணிந்து, உலவாதே.

மகளை சுற்றி நேசமிக்க, குடும்ப சூழலை கட்டமை.

மகளுக்கு உணர்த்த வேண்டிய விஷயங்களை வழவழா கொழகொழா என, நாள் முழுக்க சொல்லிக் கொண்டே இராதே. அறிவுரை, திருக்குறள் போல ரத்தினசுருக்கமாய் இருக்கட்டும்.

நீயும், கணவரும், மகளிடம் உங்கள் எதிர்பார்ப்புகள் பற்றியும், அவளின் எதிர்பார்ப்புகள் பற்றியும் விவாதியுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை, மகள் நிறைவேற்றினால் அவளுக்கு கிடைக்கும் சலுகைகளை எடுத்துரையுங்கள்.

மகளுக்கு ஆண் நிர்வாகத்தின் அடிப்படையை சொல்லிக் கொடு.

மகளின் நடத்தை விதிகளை முதலுக்கு மோசமில்லாமல், அவ்வப்போது தளர்த்தி அவளை மகிழ்ச்சிபடுத்து.

மகளின் ஆண் - பெண் நண்பர்களை தணிக்கை செய். அவளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடு.

மகள், உன்னை பிரதிபலிக்கும் ஒளிநகல் அல்ல. அவளுக்கென்று இருக்கும் தனித்துவத்துக்கு ஊறுவிளைவிக்க முயற்சிக்காதே.

மகள் முன் உங்கள் நடத்தை, அழகிய முன் மாதிரியாக விளங்கட்டும்.

குடும்ப அன்றாட நிகழ்வுகளில் மகளை, பார்வையாளராக நிறுத்தாதே; பங்கேற்பாளராக மாற்று.

'டீன் - ஏஜ்' பெண்கள், தொழில்நுட்பம் சார்ந்த தலைமுறையினர். அவர்கள் மிடுக்கானவர்கள், அசாத்திய துணிச்சல் உள்ளவர்கள். அவர்களை சரியான திசையில் முடுக்கி விட்டு, ஒதுங்கிக் கொண்டால், அவர்கள் ஏழாம் வானம் ஏறி, சூரியக்கனியை பறிப்பர்.

என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us