sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : ஆக 18, 2024

Google News

PUBLISHED ON : ஆக 18, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மு.நாகூர், ராமநாதபுரம்: உ.பி., அரசு பள்ளிகளில், தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது குறித்து?

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில், இதுபோன்ற தொழில் பயிற்சி தொடர்பான பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நம் மாநில அரசு, பின்பற்ற வேண்டுமே!

* வி.மாரீஸ்வரி, குமரகிரி, துாத்துக்குடி: 'உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கும் கோரிக்கை வலுத்திருக்கிறது. ஆனால், பழுக்கவில்லை...' என்கிறாரே, முதல்வர் ஸ்டாலின்?

சீக்கிரம் பழுத்துவிடுவார்!

* ம.வசந்தி, திண்டிவனம்: எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் முதல்வர் ஸ்டாலின், அனைத்து வடிகால் வசதியையும் செய்து விட்டாரா?

வடகிழக்குப் பருவ மழை வந்தால் தெரியும்!

ராஜா சிங், தஞ்சை: ஈரான், இஸ்ரேலைத் தாக்கினால், மூன்றாம் உலகப் போர் வந்துவிடுமா?

வராது!

ஏ.அப்துல் மாலிக், திண்டுக்கல்: 'தினமலர்' நாளிதழில் வெளியாகும் செய்திகள் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கின்றனரே... தினமும், 'தினமலர்' நாளிதழை, அதிகாரிகள் படிக்கின்றனரா?

படிப்பதால் தானே நடவடிக்கை எடுக்கின்றனர்!

ம.அகல்யா, மருதுார்குறிச்சி, குமரி: நம், 'தினமலர் - வாரமலர்' இதழுக்கு, வெளிநாட்டு வாசகர்கள் இருக்கின்றனரா?

'ஆன்லைனில்' படித்து வருகின்றனர்; உலகம் முழுவதிலுமிருந்து, 'இ-மெயிலில்' கடிதங்கள் வருகின்றன!

ஆர்.சம்யுக்தா, மதுரை: தங்களுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்வோர், அவர்களுடைய கேமராவில் படம் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டா?

கிடையாது! அவர்களது மொபைல்போனில் புகைப்படம் எடுக்க முயல்வர்; நான், மறுத்து விடுவேன்!

கே.காசி, திருவண்ணாமலை:இரவில் துாங்கும்போது, உங்களுக்கு கனவுகள் வருவதுண்டா?

அதிகாலை, 4:00 மணிக்கு வரும்; கண் விழிக்கும் போது, அனைத்தும் மறந்து விடும்!






      Dinamalar
      Follow us